ஒளிரும் F 35 A விமானம், அமெரிக்காவிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயார் நிலையில் விமானப்படை

இந்திய விமானப்படை F 35 A விமானத்தை வாங்க முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, விமானப்படை சுமார் 126 F35A விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதே நேரம் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ள FGFA திட்டத்திலிருந்து விலகவும் முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளது, இந்த திட்டத்தை காலம் தாழ்த்தாமல் விரைந்து முடிக்க வேண்டும் என்பதே முன்னாள் விமானப்படை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களின் கருத்தாகும்.

இந்தியாவுடன் FGFA விமானத்தை உருவாக்க சுமார் 4 முதல் 6 பில்லியன் டாலர் வரை கேட்டது ரஷ்யா, அதாவது மொத்த திட்ட மதிப்பீட்டில் சுமார் 50 %, அதோடு முழு தொழில்நுட்பத்தையும் விமானத்தில் மாறுதல்கள் செய்யும் உரிமையையும் இந்தியாவுக்கு வழங்கியது. அதோடு HAL நிறுவனம் இந்தியாவில் இதை தயாரிக்கும், ஆனால் மொத்த உதிரி பாகங்கள் மற்றும் என்ஜினுக்குள் இருக்கும் அதிக வெப்பநிலை தகடுகள் மற்றும் இன்ன சில நவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு ரஷ்யா  தராது என்றே பலர் எண்ணுகின்றனர். அதோடு ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு, முன்பு பல ஒப்பந்தங்களில் ஏமாற்றியது போலவே இதிலும் செய்யும்.

அது மட்டுமல்லாது, இந்த அதி நவீன தொழில்நுட்பங்களை சீனாவுக்கு ரஷ்யா எந்நேரமும் கொடுக்கும், இதனால் விமானத்தை பற்றிய முழு தகவல்கள் மற்றும் அதை எவ்வாறு இடை மறிப்பது  போன்ற தகவல்கள் சீனாவுக்கு எளிதில் கிடைத்துவிடும், முக்கியமாக இந்தியாவுக்கு கொடுத்துள்ள எல்லாவிதமான தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையுமே சீனாவுக்கும் கொடுத்துள்ளது ரஷ்யா, சுருக்கமாக சொன்னால் இந்தியாவை விட சீனாவை ஒரு படி மேலே வைத்துள்ளது ரஷ்யா.

சீனாவுடன் போர் என்று வந்தால் கூட, ரஷ்யா கமுக்கமாக ஒதுங்கிக்கொள்ளும், ஆனால் பாகிஸ்தானுடன் என்றால் உடனே உதவிக்கு வருவதாக மார்தட்டிக்கொள்ளும், பாகிஸ்தானுடன் எத்தகைய கடினமான போரையும் இந்தியா தாங்கிக்கொண்டு பாகிஸ்தானுக்கு பலத்த அடியை திருப்பி கொடுக்கும் , இதற்கு ரஷ்ய உதவியோ அல்லது  வேறு எந்த நாட்டின் உதவியோ தேவைப்படாது.

ஆனால் சீனாவுடன் போர் என்றால், இந்தியாவுக்கு பெரிய அளவில் உதவி தேவைப்படும், அமெரிக்கா அல்லது ரஷ்யா போன்ற நாடுகளின் உதவி இல்லை என்றால், இந்தியாவின் நிலை படு மோசமாகி விடும். 1962-ல் தருவதாக சொன்ன MiG 21 விமானங்களின் டெலிவரியைக் கூட தாமதப்படுத்தியது ரஷ்யா, அதோடு சீனாவுடனான போரில் ஒரு சிறு உதவியைக்கூட செய்யவில்லை ரஷ்யா. போரில் அமெரிக்கா மட்டும் உதவாமல் இருந்திருந்தால் இந்தியாவின் நிலையை யூகித்து கூட பார்த்திருக்க முடியாது  இது போன்ற முக்கிய காரணங்களால் தான் ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தங்கள் எதுவும் போடாமல் தவிர்த்து வருகிறது விமானப்படை.

F 35 விமானத்தை பொறுத்தவரை அதுவும் ஒரு கூட்டு முயற்சி தான், சுமார் 11 நாடுகளின் கூட்டு முயற்சி, ஆனால் திட்டத்தில் அதிகம்  அதாவது 80% முதலீட்டை அமெரிக்கா தான் செய்தது. திட்டத்தின் அதிகபட்ச வெளிநாட்டு முதலீடு அதாவது சுமார் 2.5 பில்லியன் டாலர் தொகையை கொடுத்தது இங்கிலாந்து, அதனால் இங்கிலாந்து F 35 விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் அதோடு அதில் சில மாறுதல்கள் செய்யவும் அனுமதி கொடுத்துள்ளது அமெரிக்கா.

அதோடு F 35 விமான உருவாக்கத்தில் 200, 300 மில்லியன் டாலர் கொடுத்த நார்வே, கனடா ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கூட F 35 விமானத்தை குறைந்த விலைக்கு வாங்கவும், அதோடு ஒரு சில மாறுதல்கள் செய்யவும் அனுமதி பெற்றுள்ளன.  ஒருவேளை F 35 திட்டத்தில் இந்தியாவும் வெறும் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்திருந்தால், இந்தியாவும் இங்கிலாந்தை போல பெரிய பங்குதாரராக மாறியிருக்கும். ஆனால் திட்டம் ஆரம்பிக்கும் போது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் அவ்வளவு நெருங்கிய உறவு இல்லை, அதன் பிறகே கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமெரிக்காவுடன் நெருங்கி பல சிறப்பு வாய்ந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டது. தற்போதைய அரசும் அதை முன்னெடுத்து செல்வது கொஞ்சம் ஆறுதலான விஷயமே.

F 35 விமான திட்டத்தை பொறுத்தவரை, விமான உருவாக்குதலில் முதலீடு செய்யாத நாடுகளும், F 35 விமானத்தை வாங்கியுள்ளன. ஜப்பான்  F 35 உருவாக்கும் திட்டத்தில் இல்லை என்றாலும் சுமார் 40 F 35 A விமானங்களை 10 பில்லியன் தொகைக்கு வாங்கியுள்ளது, அதிலும் சுமார் 36 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் அனுமதி பெற்று வேலைகள் நடந்து வருகிறது, அது மட்டுமல்லாது ஜப்பானின் மிட்சுபிஷி  நிறுவனம் தான் தயாரித்த சுமார் 7 பகுதி பொருட்களை F 35 விமானத்தில் சேர்த்துள்ளது. இந்தியாவின் FGFA ஒப்பந்தமும் அமெரிக்கா ஜப்பானின் F35 ஒப்பந்தமும்  இறுதி வடிவில் பார்த்தால் ஒன்று தான். ஒரு சிறிய மாற்றம் என்னவென்றால், இந்திய ரஷ்ய ஒப்பந்தம் பல இழுபறிகள், கூடுதல் தொகை மற்றும் உதிரி பொருள் கோளாறு போன்ற பல பிரச்சனைகளில் சிக்கும், ஆனால் ஜப்பான் அமெரிக்க F 35 விமானம் வெற்றிகரமாக விண்ணில் பறந்து வட கொரிய மற்றும் சீன விமானங்களை வேட்டையாடும்.

இந்தியா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டால் சுமார் 126 விமானங்களுக்கு அமெரிக்கா சுமார் 20 பில்லியன் தொகை கேட்கும், அதோடு 90  சதவீத விமானங்களை இந்தியாவிலேயே உருவாக்கவும் அனுமதி அளிக்கும், அதோடு அதில் துளியளவு கூட ரகசியங்களை சீனாவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ கொடுக்காது. குறிப்பாக சொல்லப்போனால் அமெரிக்கா விமானங்கள் எல்லாமே ரஷ்ய சீன விமானங்களோடு போட்டி போட்டு வெற்றி பெறுமாறு வடிவமைக்கப்பட்டவை.

அதுமட்டுமல்லாது ஒரு நாட்டின் F 35 விமானம் அடுத்த நாட்டு F 35 விமானத்தோடு எளிதில் தகவல்களை பரிமாறிக்கொள்ளும், போரில் சேர்ந்து சண்டையிடும். சிறிய உதாரணமாக இந்தியாவின் F 35 விமானங்களும், இஸ்ரேலின் F 35 விமானங்களும் சேர்ந்து கூட்டாக பாகிஸ்தானிய விமானப்படைகளை தாக்கி அழித்து அவர்களின் அணு ஆயுதங்களை கைப்பற்றும். சீனாவுடன் பெரிய அளவு யுத்தம் வந்தால், அமெரிக்க, தென் கொரிய மற்றும் ஜப்பானிய F 35 விமானங்களுடன் இந்தியாவின் F 35 விமானமும் சேர்ந்து சண்டையிடும்.

குறிப்பாக சொல்லப்போனால் அடுத்த பத்து அல்லது 20  ஆண்டுகளில் இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து தான் சீனாவை எதிர்த்து அதன் ஆதிக்கத்தை கட்டுக்குள் வைக்கப்போகிறது.  தற்போதைய காலத்தில் F 22 விமானத்துக்கு அடுத்து மிக சிறந்த போர் விமானமாக இருப்பது  F 35 விமானம் தான். விலை என்று பார்த்தால் கூட 100 மில்லியன் டாலருக்கும் கீழ் தான் வருகிறது.

விமானப்படையின் இந்த முயற்சிக்கு அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து திட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பது தான் பலரின் கருத்து..