ஆபரேஷன் பரக்ரம், வெளிவந்த ஒரு சில ரகசியங்கள்

2001-இல் இந்திய பாராளுமன்றத்தை பாகிஸ்தானின் உளவுத்துறையான ISI-யின் உதவியுடன் தீவிரவாதிகள் தாக்கினர், இதனால் கோபமுற்ற இந்தியா தனது பெரும்படையுடன் பாகிஸ்தானை தாக்க முடிவெடுத்து, எல்லையில் படைகளையும் தளவாடங்களையும் குவித்தது, ஆபரேஷன் பரக்ரம் என்ற இந்த நடவடிக்கையில் பல வீரர்கள் உயிரிழந்தனர், ஆனால் வெற்றிகரமாக சுமார் 7 லட்சம் ராணுவ வீரர்களை பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் போர் ஆயுதங்களுடன் நிலை நிறுத்தியது.

நவீன காலத்தில் நடந்த இந்த பெரும் படை குவிப்பு, பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பினாலும் இந்த திட்டம் பல ராணுவ வல்லுநர்களால் வெற்றியாகவே கருதப்பட்டது. இந்த மாபெரும் படை நகர்வில் சுமார் 1000 இந்திய வீரர்கள் உயிரழந்தனர். இந்த உயிரிழப்பே ஆபரேஷன் பராக்ரம் நடவடிக்கையில் சந்தேகத்தை எழுப்பியது.

ஆனால் பதிலுக்கு பாகிஸ்தானில் என்ன நடந்தது என்பது குறித்த விஷயங்கள் இன்னும் வெளிவராத நிலையில் ஒருசில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்திய ராணுவ படை நகர்வுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் தனது படைகளை எல்லைக்கு நகர்த்தியது, சுமார் 4 லட்சம் பாகிஸ்தானிய வீரர்கள் இந்திய எல்லைக்கு அருகே நகர்த்தப்பட்டனர். ஊடக சுதந்திரம் இல்லாததால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றி எவ்வித தகவல்களும் வெளிவரவில்லை.

ஆனால் இந்திய ராணுவத்தின் உளவு பிரிவினர் பாகிஸ்தானில் தகவல் தொடர்பை இடை மறித்ததில் பல தகவல்களை கண்டறிந்துள்ளனர். அந்த இடைமறிப்பில் கிடைத்த தகவல்களே இப்போது வெளியில் கசிந்துள்ளது.

பாகிஸ்தான் இந்திய படை நகர்வை அறிந்ததும் தனது படைகளையும் உஷார் நிலைக்கு அறிவுறுத்தியது, அதோடு படை நகர்வுக்கு உத்தரவிட்டு படைகளை தயார் செய்ய பெரும் பணம் செலவழிக்கப்பட்டது, இதான் பாகிஸ்தானின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றது. பல திட்டங்கள் நிறுத்தப்பட்டு அந்த நிதிகள் ராணுவத்துக்கு திருப்பட்டது.

இந்தியா பாகிஸ்தானுக்குள் ஊடுருவாமலிருக்க அணைகளை திறந்து வெள்ளத்தை உண்டாக்கியது, அதோடு பல நீர்நிலைகளில் பாசிகளையும் மற்ற நீர்வாழ் தாவரங்களையும் படரவிட்டு நீர்நிலைகளை கடும் மாசுக்கு உட்படுத்தியது, இதனால் பாகிஸ்தானின் தாடா காந்தீரா என்ற பெரும் விவசாய பகுதியில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு எவ்வித விவசாயமும் நடைபெறவில்லை, செயற்கையான வெள்ளத்தால் நீர் மின் நிலையங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின, இதனால் மின்சார உற்பத்தியும் நீண்ட காலம் தடைபட்டது.

ராணுவம் பயணம் செய்யவும், தளவாடங்களையும் கொண்டு செல்ல பயன்படும் ரயில் வழித்தடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது, பாகிஸ்தானின் கூற்றுப்படி இந்திய சிறப்பு படைகள் அவர்களின் ரயில் வழித்தடங்களில் சேதங்களை உண்டாக்கியிருக்கலாம், அதோடு ரயில் வழி தடங்களை சரி செய்யவே பாகிஸ்தான் அதிக நேரத்தை செலவிட்டது.

இரு நாடுகளும் ஜனவரியில் ஓரளவு சமாதானத்திற்கு வந்திருந்தது, ஆனால் அதுவரை பாகிஸ்தானின் கூடுதல் டாங்கி படைகள் தயாராக இல்லை. ஒரு வேளை போர் வந்திருந்தால் பாகிஸ்தானின் டாங்கி படையை மொத்தமாக இந்தியா அழிந்திருக்கும்,

பாகிஸ்தானின் படை நகர்வின் போது சுமார் 4 பட்டாலியன் அதாவது 4000 பாகிஸ்தானின் சிறப்பு படை வீரர்கள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிராக போரில் ஈடுபட்டுக்கொண்டும், தாலிபான்களுக்கு பயிற்சியும் அளித்து கொண்டிருந்தனர். அதில் பெரும்பாலானோர் அமெரிக்கா கூட்டுப்படையால் கொல்லப்பட்டிருந்தனர், பலரின் நிலை குறித்து தகவல்களே இல்லை.

இந்திய பக்கமும் ஒரு சில தவறுகள் இருந்தாலும், கடுமையான ராணுவ அதிகாரிகளின் உத்தரவுகளாலும் வீரர்களின் அதீத நாட்டு பற்றாலும், பல சேதங்கள் தடுக்கப்பட்டு ஆபரேஷன் பரக்ரம் ஒரு மாபெரும் போர் ஒத்திகையாக கருதப்பட்டது.

முக்கியமாகராணுவத்தின் வெடி பொருள் பற்றாக்குறை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டு, அதை சரிப்படுத்த போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.ராணுவத்துக்கும் ரயில்வே துறைக்குமான தகவல் தொடர்புகளின் இருந்த தடைகள் களையப்பட்டு, நிகழ் நேர தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு, ராணுவ ரயில்கள் செல்ல முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அது நடைமுறையும் படுத்தப்பட்டது,

ராணுவம் ஏவுகணை மற்றும் மற்ற படைகளுடனும் நிகழ்நிலை தகவல்தொடர்பு ஏற்படுத்தப்பட்டது, இதன் மூலம் ஒருவர் அறிந்த தகவல்களை மற்ற படை தளபதிகளும் வீரர்களின் அதிகாரிகளும் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும்.

அதோடு ஆபரேஷன் பரக்ரம் நடவடிக்கையின் போது, ராணுவம் விமானப்படை மற்றும் கப்பல் படையின் ராடார்கள் ஒன்றிணைக்கப்பட்டு, மொத்த இந்திய பாகிஸ்தான் வான் எல்லையும் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அதே நேரம் ராணுவமும் விமானப்படையும் பல முறை ஆளில்லா உளவு விமானங்களை பாகிஸ்தானுக்குள் அனுப்பி, அவர்களின் படை நகர்வை தொடர்ந்து கண்காணித்து கொண்டிருந்தது, இது பாகிஸ்தானின் வான் எல்லை தகுந்த கண்காணிப்பில் இல்லை என்று காட்டினாலும், ஒரு இந்திய ஆளில்லா உளவு விமானத்தை லாகூர் அருகே பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியது.

ஆபரேஷன் பரக்ரம் நடவடிக்கையின் போது அமெரிக்கா ஆப்கானை தாக்கி கொண்டிருந்தது, அதே நேரம் பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு தொடர்ந்து தலைவலியை கொடுத்துக்கொண்டிருந்தது. இந்தியா பாகிஸ்தானை தாக்கி அமெரிக்காவுக்கு கொஞ்சம் உதவி செய்யும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரஷ்யா அதிபர் புதின் போர் வராமலிருக்க இரு நாடுகளுடனும் பேசி, தொடர்ந்து இந்தியா முன்னேறாதவாறும் போர் நடக்காமலிருக்கவும் முட்டுக்கட்டை போட்டார்.

ஒருவேளை இந்தியா தாக்கியிருந்தால் பாகிஸ்தான் தவிடுபொடியாகியிருக்கும் என்பதே உண்மை.