இலகு ரக இயந்திர துப்பாக்கி வாங்கும் திட்டத்தை ரத்து செய்தது அரசு

ராணுவத்தின் தரைப்படை வீரர்களுக்கு இலகு ரக இயந்திர துப்பாக்கி வாங்கும் ஒப்பந்தத்தை மூன்றாவது முறையாக ரத்து செய்துள்ளது பாதுகாப்பு அமைச்சகம். இதனால் ராணுவம் பழைய இன்சாஸ் இலகு ரக துப்பாக்கியையே வைத்து சமாளிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் இன்சாஸ் LMG சுமார் 6.8 கிலோ எடையுள்ளது அதோடு வெறும் 30 குண்டுகளை சுடும் உறையை தான் பயன்படுத்துகிறது, மேலும் இது மிக சிறிய குண்டான 5.56x45mm குண்டைதான் சுடும். அதோடு அதன் தாக்கும் தொலைவும் வெறும் 700 மீட்டர் தான்.
இந்த பழைய இயந்திர துப்பாக்கியை மாற்ற ராணுவம் பல முறை முயற்சி எடுத்து வந்துள்ளது 2012-லிருந்தே இதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வந்தாலும் பல காரணங்களுக்காக அரசு அதற்கு தடை போட்டு வருகிறது, தற்போது ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தையும் சேர்க்கும் போது இது மூன்றாவது முறை.
உலகின் எல்லா ராணுவ தரைப்படை பிரிவுகளுமே நவீன துப்பாக்கிகளை வைத்துள்ளனர், ஆனால் இந்தியா மட்டும் தான் இன்னும் மிக பழைய FN-FAL மாடல்களை ஒட்டிய INSAS துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகிறது.

இலகு ரக இயந்திர துப்பாக்கி என்ற பெயரில் ராணுவம் பயன்படுத்தி வரும் துப்பாக்கிகள் அனைத்துமே சாதார இன்சாஸ் துப்பாக்கியின் வேறு ஒரு வடிவமே. அதோடு உதவி அளிக்கும் இயந்திர துப்பாக்கி இந்தியாவிடம் ஒன்று கூட இல்லை, பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட சீன தயாரிப்பு PKM துப்பாக்கிகளை தான் இந்திய ராணுவத்தின் ஒரு சில பிரிவுகள் காஷ்மீரில் பயன்படுத்தி வருகிறது.
கடந்த சில ஒப்பந்தங்களில் இஸ்ரேலின் IWI நிறுவனம் தயாரித்த நெகவ் துப்பாக்கி தான் வென்றது. நெகவ் துப்பாக்கி சுமார் 100 குண்டுகளை சுடும் உறையை பயன்படுத்துகிறது, மேலும் பெரிய அளவிலான, அதிக தாக்கும் சக்தியை கொண்ட 7.62x51mm அளவுள்ள குண்டை சுடுமாறு நெகவ் வடிவமைக்கப்பட்டுள்ளது அதோடு அதன் தாக்கும் தூரமும் 1000 மீட்டருக்கும் மேலே இருக்கும், மொத்த எடை 8 கிலோவுக்கும் கீழே தான். இந்த துப்பாக்கியை வாங்க ராணுவம் பல முறை முயற்சி எடுத்தும் அரசு தொடர்ந்து முடுக்குக்கட்டை போட்டு வருகிறது
சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி ராணுவத்துக்கு முதல் கட்டமாக சுமார் 4,400 நெகவ் NG 7 துப்பாக்கிகளை வழங்கும், அதோடு அதிகளவில் குண்டுகளுமே, மேலும் துப்பாக்கி தயாரிக்கும் மொத்த வழிமுறைகளையும் இந்திய ஆயுத தொழிற்சாலைக்கு வழங்கவும் இஸ்ரேல் ஒத்துக்கொண்டது. இதற்காக சுமார் 13,000 கோடி ருபாய் செலவிட தயாராக இருந்தது ராணுவம். ஆனால் ஏனோ பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் மீண்டும் இந்த ஒப்பந்தங்களை ரத்து செய்து வருகிறது.

இந்திய விமானப்படையின் சிறப்பு படையான கருட் கமாண்டோ வீரர்கள் இஸ்ரேலின் நெகவ் இயந்திர துப்பாக்கிகளை தான் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இவற்றை சுமார் 6 அல்லது 8 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
Special Frontier Force எனப்படும் சிறப்பு படை வீரர்களும் இந்த நெகவ் துப்பாக்கிகளை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
முன்னணியில் நின்று சண்டையிடும் வீரர்களுக்கு இது போன்ற இயந்திர துப்பாக்கியின் அவசியம் மிக தேவை. அது போல குறி பார்த்து சுடும் ஸ்னைப்பர் துப்பாக்கிகளும் தான். ஆனால் இவைகளை வாங்காமல் தொடர்ந்து அதற்கான முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது அரசு..
