உருக்குலைக்கப்படும் உள்நாட்டு தயாரிப்பான தனுஷ் ஆர்டில்லரி

ஊழல்களுக்கிடையில் 1986-இல் சுவீடன் நாட்டிலிருந்து போபர்ஸ் ஆர்டில்லரியை இந்தியா வாங்கியது, வாங்கும் போது கூடவே அதன் தொழில்நுட்பம், தயாரிக்கும் முறைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவும் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது, ஒப்பந்தத்தின் படி, தொழில்நுட்பத்தோடு பயிற்சியும் உதவியும் வழங்கியது சுவீடன்,

அவர்கள் வழங்கிய தொழில்நுட்பத்தை படித்து புரிந்து கொள்ள அரசு நிறுவனமான ஆர்டில்லரி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு (GCF) சுமார் 25 ஆண்டுகள் ஆனது.  அதை அன்றைக்கே ஒரு தனியார் நிறுவனத்திடம் கொடுத்திருந்தால், இந்நேரம் இந்தியா ஆர்டில்லரி பிரிவில் தன்னிறைவு பெற்றிருக்கும், அதோடு ஏற்றுமதி செய்து வர்த்தகத்தையும் பெருக்கியிருக்கும், ஊழலிலேயே திளைத்த அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஏன் சில ராணுவ அதிகாரிகளின் பிடிவாதங்களால், இன்றுவரை அந்த ஆர்டில்லரியை நவீனப்படுத்தி புதியதை செய்ய முடியவில்லை.

போபார்ஸ் ஆர்டில்லரியின் அதே அளவில் நீட்டிக்கப்பட்ட குழலுடன் தயாரிக்கப்பட்ட தனுஷ் ஆர்டில்லரி பல சோதனைகளில் வெற்றி பெற்றாலும், அதன் குழலை இதுவரை சரியாக வடிவமைக்க முடியவில்லை, அடிமட்டம் வரை ஊழல் ஊறிய நாட்டில் குண்டூசி தயாரிக்கவே முடியாது, இதில் ஆர்டில்லரி எப்படி தயாரிப்பது.

தனுஷ் ஆர்டில்லரியை முதல் முறை சோதனை செய்த ராணுவம், ஒரு சில குண்டுகள் சுட்டதும், அதன் துப்பாக்கி குழலில் மாற்றம் இருப்பதை கண்டது, தொடர்ந்து சுடவே, குழல் வெடித்தது, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை, துப்பாக்கி குழாயில் உள்ள பிரச்சனையை களைந்து விட்டு வருமாறு GCF-க்கு அறிவுரை கூறியது ராணுவம், மற்றபடி ஆர்டில்லரியில் வேறு பிரச்சனைகள் எதுவும் இல்லை, அதிலும் பிரச்னை என்றால் GCF எதுக்கும் லாயக்கு இல்லை என்று கூற முடியும், காரணம் மொத்த தொழில்நுட்பமும் போபர்ஸ் ஆர்டில்லரியிலிருந்து தான் கிடைத்தது.

அடுத்த கட்ட இறுதி சோதனைக்கு தயாராகி ராணுவத்தில் கைகளில் சுமார் ஆறு ஆர்டில்லரிகள் கொடுக்கப்பட்டது, தற்போதும் அதே பிரச்னை தான் உள்ளது, தற்போதும் சோதனையின் போது துப்பாக்கி குழல் வெடித்துள்ளது, முடியாவிட்டால் திட்டத்தை வேறு ஒரு தனியாரிடம் கொடுத்து செய்ய சொல்லலாமே, அதற்கு அரசு அனுமதி இன்னும் பல சட்ட சிக்கல்களை வைத்துள்ளது அரசு.

இது இப்படி இருக்க, இந்த துப்பாக்கி தயாரிப்பிலும் ஊழல் செய்து பணம் பார்த்துள்ளது GCF, ஆர்டில்லரி துப்பாக்கியின் முக்கிய பகுதிபெருளான wire race roller bearing என்னும் அமைப்பை, இந்தியாவில் செய்ய அரசு நிறுவனங்கள் யாருக்கும் தெரியாது, அதனால் வெளிநாடுகளிலிருந்து தான் வாங்கப்படும், இந்த உதிரி பாகம் ஒன்றின் விலை மட்டும் சுமார் 9 லட்சம் ருபாய் வரை இருக்கும்,

இதை ராணுவம் ஜெர்மனி நாட்டிலிருந்து வாங்கி வந்துள்ளது, அதோடு ஜெர்மனி நாட்டு தயாரிப்பின் தரம் மற்றும் செயல்பாடு உயர்வாக இருப்பதால் அதையே பயன்படுத்த ஆர்டில்லரி தயாரிக்கும் GCF-க்கு ராணுவம் அறிவுரை வழங்கியிருந்தது.   இந்த உதிரி பாகத்திலும் ஊழல் செய்து பணம் பார்த்துள்ளது GCF,

2014-இல் வாங்கப்பட்ட இந்த உதிரி பாகங்களை சோதனை செய்த மற்றொரு குழு, அளவில் வித்தியாசம் இருப்பதை கண்டு இது குறித்து விசாரிக்க துவங்கியது,   உதிரிபாகத்தின் பெயர் சான்றிதழ் எல்லாமே ஜெர்மன் நிறுவனமான ஆன்ட்ரிப்ஸ்டேசனிக் பெயரில் இருந்தது,

தரத்தில் சந்தேகம் எழவே GCF-ன் தர சோதனைக்குழு சிபிஐ-யின் உதவியை நாடியது, ஜெர்மனி நிறுவனத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, அப்படி புதிய ஆர்டர் எதுவுமே இல்லை என்றும், மேலும் அதை பரிசோதித்தபோது அதை அவர்கள் நிறுவனம் தயாரிக்கவில்லை என்றும் அறிக்கை கொடுத்தது.

இதை மேலும் விசாரித்த சிபிஐ, இந்த உதிரிபாகங்களை GCF தொழிற்சாலையின் ஒரு சில அதிகாரிகள் ஆராய்ந்து உறுதி செய்து அதை தனுஷ் ஆர்டில்லரியில் பொருத்த அனுமதி வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிந்து சேல்ஸ் சிண்டிகேட் என்னும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் இந்த உதிரிபாகங்களை சீனாவிலிருந்து வாங்கி அதை ஒரு சில GCF அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பெயரை மாற்றி பின்னர் அதை தனுஷ் ஆர்டில்லரியில் இணைத்துள்ளது, என்று சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளது.

மொத்தத்தில் பார்த்தால் அரசு நிறுவனங்களான OFB மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ஊழலில் திளைத்துள்ளதோடு, தனியார் நிறுவனங்கள் போட்டிக்கு வரமாலிருக்க அரசுக்கும் பங்கு கொடுத்து வருகிறது என்பதே உண்மை.