அடுத்த சீன இந்திய போர், பலம் பலவீனம்

எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்து வரும் இந்த நேரத்தில் யாருக்கு பலம் அதிகம் என்ற கேள்வியே எழுகிறது, சீனா பெரிய படை பலம் அதோடு உள்நாட்டு தயாரிப்புகள், சிறந்த கட்டமைப்பு மற்றும் அதி பயங்கர பொருளாதார பின்புலத்தோடு பயங்கரமாக காட்சியளிக்கிறது, இந்தியாவோ போர் அனுபவத்தோடும், வெளிநாடுகளின் உதவியாலும் சீனாவுக்கு சவால் விடக்கூடிய ஒரு நாடாக இருக்கிறது.

போர் என்றவுடனேயே அனைவரும் இரு நாடுகளின் ஒட்டுமொத்த ராணுவத்தின் பலத்தை ஒரே பக்கத்தில் ஒப்பிட்டு விடுகின்றனர், ஒரு போரோ அல்லது சண்டையோ அப்படி நடைபெறுவது இல்லை, மிக சிறந்த உதாரணம் இஸ்ரேல் மற்றும் உக்ரைன் போன்ற நாடுகள் தான், பெரும் படையை நேர்த்தியாக சமாளித்து இரு நாடுகளுமே வெற்றியை சூடிக்கொண்டுள்ளன.

சீன இந்திய எல்லை நெடு நீள மலை பகுதிகளுக்கிடையில் அமைந்துள்ளது, அங்கு எந்த ஒரு நாட்டாலும் தனது மொத்த படையை குவிக்க முடியாது, இருந்தாலும் ஓரளவு படையை குவித்து தத்தமது படைகளுக்கு சாதகமான பகுதிகளில் ஊடுருவி சேதங்களை விளைவிக்கும், அதோடு சீனா தனது தொலைதூர தாக்கும் ஏவுகணைகள் கொண்டு இந்தியாவின் முக்கிய நகரங்களை தாக்கும், இந்தியா கொஞ்சம் பலமாக அடி வாங்கினாலும், சீனாவுக்கு எளிதில் ஆறாத வடுவையும் கொடுக்கும்,

இந்திய எல்லைக்குள் எளிதில் ஊடுருவவும் பலத்த சேதத்தையும் விளைவிக்கவும் சுமார் 31  இடங்களில் சீனா சாலைகளை அமைத்துள்ளது, இதன் மூலம் இந்திய எல்லைக்குள் அல்லது மலை உச்சிகளை கைப்பற்றி டாங்கிகள் அல்லது ராக்கெட்டுகள் மூலமாக தொடர்ந்து இந்திய நிலைகளை தாக்கி இந்திய படைகளுக்கு பலத்த சேதத்தை உண்டாக்கும், சீனாவின் WS ரக ராக்கெட்டுகள் சுமார் 60 முதல் 200 கிலோமீட்டர் வரை உள்ள இலக்குகளை தாக்க வல்லது, இவை இந்தியாவின் முக்கியமான நகரங்களான டார்ஜிலிங் டேராடூன் தவாங் ஆகியவற்றை தாக்கும், போரின் முதல் வாரத்தில் மட்டும் சீனா சுமார் 20,000 முதல் 40,000 ராக்கெட்டுகளை இந்த நகரங்களின் மீது வீசும், அதுவும் சீனா மலை உச்சிகளை அடைந்தால் தான்.

  இந்திய ராணுவத்தின் முதல் இலக்கே இந்த மலை உச்சிகள் தான், இந்த 31 இடங்களையும் இந்திய  விமானப்படையின் விமானங்கள் தொடர்ந்து கண்காணிக்கும், அதோடு மலை உச்சியை கைப்பற்ற நினைத்தால் குண்டு வீசி எதிரியை அழிக்கும், அஸ்ஸாமில் உள்ள நீலாபாரி உளவு விமான தளம் அருணாச்சல் முதல் சிக்கிம் வரை உள்ள எல்லைகளையும் அம்பாலாவில் உள்ள விமான தளம் நேபாளம் முதல் காஷ்மீர் வரையும் தொடர்ந்து 24 மணி நேரம் வரையும் கண்காணிக்கும்.

அதோடு சீன எல்லை அருகே சுமார் 31  பெரிய விமான தளங்கள் உள்ளன, இவை அனைத்துமே நவீன போர் விமானங்களான சுகோய், மிராஜ் மற்றும் மிக் ரக விமானங்களை கொண்டுள்ளன,  இவற்றை வைத்து சீனாவுக்கு மிரட்டல் விருப்பத்தோடு மட்டுமல்லாது சீன விமானப்படை தாக்குதல் நடத்தாதவாறு பார்த்துகொள்ளும்,  மறு பக்கம் சீனாவிடம் 33 பெரிய விமானப்படை தளங்கள் உள்ளன, இவை அனைத்தும் சுமார் 12,000 அடி உயரத்தில் உள்ளன, இங்கு சீனா தனது சுகோய், மற்றும் நவீன J 20 விமானங்களையும் அதோடு ஏவுகணைகளை வீசும் பாமர் விமானங்களையும் வைத்துள்ளது, இதை வைத்து இந்திய விமானப்படையோடு போட்டி போட்டு தனது படைகள் முன்னேற உதவி செய்யும்.

சீனாவின் விமான தளங்கள் அதிக உயரத்தில் உள்ளதால் அவர்களால் அதிக அளவு ஆயுதங்களுடன் போர் விமானங்களை இயக்க முடியாது, அது சீனாவுக்கு பலத்த அடியாக இருக்கும், இருந்தாலும் அவர்களின் HQ 16, HQ 9 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இந்திய விமானப்படை தாக்குதலிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும்.

   விமானப்படை சண்டை பற்றி கூற வேண்டுமானால், எல்லையில் இருவருக்கும் சம பலம் என்றாலும் இந்தியாவின் கை சிறிது ஓங்கியே உள்ளது, ஒருவேளை அவர்களின் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் திறம்பட செயல்பட்டால் இந்தியாவுக்கு அது பெரும் சவாலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை, இந்திய விமானப்படை சறுக்கினால், டார்ஜீலிங் என்னும் சொர்க்கம் கடும் தாக்குதலை எதிர் கொள்ள வேண்டியிருக்கும், இது சீனாவுக்கு பெரிய வெற்றியாகவே கருதப்படும்.

போர் வீரர்கள் எண்னிக்கை வைத்து பார்த்தல் இந்த 31 இடங்களின் வழியாக சீனா சுமார் இரண்டு டிவிஷன் அளவு வீரர்களை இந்திய எல்லைக்குள் முதல் 24  மணி நேரத்திற்குள் அனுப்ப முயற்சிக்கும், ஒரு டிவிஷனில் சுமார் 24,000-50,000 வரை வீரர்கள் இருப்பார்கள் அதோடு இரண்டு அல்லது மூன்று டாங்கி பிரிவு ஓன்று அல்லது இரண்டு சிறப்பு படை பிரிகேட்  வீரர்களையும் அது போரின் முதல் நாளில் இந்திய எல்லைக்குள் அனுப்பும்,

இந்த 31 முக்கிய இடங்கள் அல்லாது வேறு எந்த வழிகள் சாத்தியமோ அங்கெங்கெல்லாம் அவைகள் ஊடுருவி இந்திய நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும், எதிர்க்கும் இந்திய வீரர்களோடு அவை சண்டையிடும், ஆக மொத்தம் முதல் நாளில் சீனா சுமார் ஒரு லட்சம் வரை வீரர்கள் 1000 டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் 20,000 சிறப்பு படை வீரர்களை இந்தியாவுக்குள் அனுப்பும்.

மேலும் போர் துவங்கிய அடுத்த சில நாட்களிலிருந்து ஒரு மாதத்திற்குள் சுமார் 6  லட்சம் வீரர்களையும் டாங்கிகளையும் திபெத் மற்றும் அருணாச்சல் பகுதிக்குள் அனுப்பிவிடும், அவர்களின் தேர்ந்த ரயில் பாதைகள் மற்றும் சாலைகள் மூலம் இது சாத்தியமே அதோடு 6 லட்சம் வீரர்கள் தங்கவும் அவர்களுக்கு உணவு வழங்கவும் திபெத் மற்றும் அருணாச்சல் அருகே பெரிய அளவில் கட்டுமானங்களையும் ஏற்கனவே நிறுவி உள்ளது சீனா, இதனால் போர் நேரங்களில் சீனா வீரர்களுக்கு உணவு மற்றும் ஆயுதங்கள் தங்கு தடையின்றி கிடைக்கும்.

இருந்தாலும் வல்லுநர்கள் கூற்றுப்படி சீனா இவளவு வீரர்களை அனுப்பாது, அப்படி அனுப்பினால் இந்தியாவுடன் ஒரு பெரும் போருக்கு அது தயாராக வந்துள்ளது என்றே அர்த்தம் என்கின்றனர், ஆக சாத்தியக்கூறுகளோடு பார்த்தல் இந்திய ராணுவம் சுமார் இரண்டு லட்சம் சீன வீரர்கள் சுமார் 2000 டாங்கிகள் மற்றும் 3000 கவச வாகனங்களை எதிர்த்து போரிட வேண்டியிருக்கும், முக்கியமாக சீனாவின் ராக்கெட்டுகள் மற்றும் ஆர்டில்லரிகள் அவர்கள் முன்னேற பெரும் உதவி செய்யும், சீன ஆர்டில்லரிகளையோ அல்லது ராக்கெட்டுகளையோ அழிக்காமல் இப்படையை இந்தியாவால் சமாளிப்பது கடினமே.

சீனாவின் இந்த பெரும் படை இந்திய ராணுவத்தின் தேர்ந்த வீரர்களை போகுமிடமெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும், அருணாச்சலை மையம் கொண்டுள்ள இந்திய ராணுவம் தவாங் பகுதியில் எந்த சீன படையையும் துவம்சம் செய்யும் அளவு பலத்தோடு உள்ளது, குறிப்பாக சொல்லப்போனால் இந்திய ராணுவத்திலேயே அதிகம் பலம் வாய்ந்த 4-வது கார்ப்ஸ் படைப்பிரிவின் 5-வது மலைப்பிரிவு ராணுவம், இந்த சிறப்பு ராணுவ பிரிவு போரின் முதல் நாளிலேயே சீன எல்லைக்குள் புகுந்து சில இடங்களை கைப்பற்றி விடும், இந்த படைக்கு உதவியாக  அருகில் உள்ள விமான ஓடுபாதைகள் தொடர்ந்து ஆயுதங்களையும் உணவுகளையும், தேவைப்பட்டால் எல்லை கடந்து கொடுக்கவும், அதோடு எதிரி நிலைகளை தாக்க ஹெலிகாப்டர்களையும் போர் விமானங்களையும் பயன்படுத்தும்.

இப்படைக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது, சாலை மற்றும் ரயில் வசதி இல்லாததே, இப்பெரும் படை அருகில் உள்ள விமான ஓடுபாதையை தான் நம்பியுள்ளது, ஒருவேளை இந்த ஓடுபாதையை சீனா ஏவுகணை கொண்டு தாக்கினால், இப்படை மிகுந்த சிரமத்திற்குளாகும் என்பதில் ஐயமில்லை.

எளிதாக சொன்னால் தவாங் பகுதிக்கு செல்ல வேண்டுமானால் சுமார் 485 கிலோமீட்டர் மோசமான சாலைகளை கடந்தே செல்ல வேண்டும், தவாங் பகுதிக்கு அருகே உள்ள ரயில் நிலையம் தேஸ்பூர் தான், அதுவும் சுமார் 485 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, அங்கிருந்து சாலை மூலம் செல்ல வேண்டுமானால் சுமார் 10 மணி நேரம் பிடிக்கும், இது ராணுவத்துக்கு உதவிக்கு உணவு, ஆட்கள் மற்றும் ஆயுதங்கள் அனுப்ப பெரும் சவாலாக அமையும்.  தற்போதைய அரசு டெஸ்பூர் முதல் தவாங் வரை ரயில் பாதை அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது, இது 2022-க்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

எல்லையில் சீனாவுக்கு சாதகமான இடங்கள் அனைத்திலும் சீனா தனது முழு பலத்தோடு உள்ளது, அதாவது 31 இடங்கள், இந்தியாவும் அது போல சுமார் 73 இடங்களை கண்டறிந்து அங்கு முழு வீச்சில் வேலைகளை செய்து வருகிறது அதில் சுமார் 23 பகுதிகள் ஏற்கனவே சீனாவுக்கு இணையான வசதியோடு உள்ளது, இந்த 23 பகுதிகள் வழியாக இந்தியா சீனாவுக்குள் ஊடுருவும், அதோடு சில இடங்களை கைப்பற்றி தன்  வசம் கொண்டுவந்து விடும், இந்த வீரர்களுக்கு உதவியாக ஆர்டில்லரிகள் மற்றும் சில ராக்கெட் வீசும் அமைப்புகள் உதவி புரியும்,

உண்மையில் சொல்லப்போனால் இந்த உதவி அமைப்புகள் மிகக்குறைவே,  20-40 ஸ்மெர்ச் மற்றும் சுமார் 200 பினாக்கா ராக்கெட்டுகள் மட்டுமே இந்த வீரர்களுக்கு உதவி செய்யும், இது மிக மிக குறைவு அதோடு இவற்றால்  சுமார் 1000-2000 ராக்கெட்டுகளையே ஒரு நாளில் வீச முடியும், சீனாவில் உள்நாட்டு உற்பத்தி திறனால் அவர்களால் 10,000 ராக்கெட்டுகளை ஒரே நாளில் வீச முடியும்,

இந்திய தொழிற்சாலைகளாலோ அல்லது அரசின் OFB -யாலோ சுமார் 100 அல்லது அதற்கும் குறைவான ராக்கெட்டுகளை தான் ஒரு மாத காலத்தில் தயாரிக்க இயலும், ஒரு வேளை போர் நேரங்களின் அது 200 ஆகலாம்,  ஆக இந்தியாவின் ராக்கெட் ஆர்டில்லரி சக்தி சீனாவின் முன்பு ஒரு கடுகு போலவே.

போரின் போது 4000 கிலோமீட்டர் நீள சீன எல்லையில் இந்தியா சுமார் 8 டிவிசன் மலைகளில் சண்டையிடும் ராணுவ வீரர்களை அனுப்பும், ஒரு டிவிசன் என்பது சுமார் 20,000 வீரர்கள் கொண்ட படை, ஆக மொத்தம் சுமார் 1,60,000 வீரர்கள் அதோடு டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் ஆகியவற்றையும் அனுப்பும்,  இப்பெரும் படை அதே அளவு சக்தி கொண்ட மற்றும் பக்க பலம் கொண்ட சீனா வீரர்களை தாக்கும்,

முன்பு சொன்னது போல சீனா பெரிய அளவுக்கு போருக்கு தயாராகி 6 லட்சம் வீரர்களை திபெத்தில் குவித்தால் இந்தியாவின் நிலை மிக மிக மோசமாகி விடும், ஆனாலும் இதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு என்பதால், இரு நாடுகளும் சம பலத்துடன் போரிடும்.

   மொத்தத்தில் சீனா சிக்கிம் மற்றும் உத்தராகண்ட் பகுதியில் பலத்தோடு உள்ளது, இந்தியா லே  மற்றும் தவாங் பகுதியில் பலத்தோடு உள்ளது,

மேலும் கப்பற்படை போர் என்பதற்கு சாத்தியமே இல்லை, காரணம் சீனா தனது கப்பலைகளை தளத்திலிருந்து நெடுந்தூரம் அனுப்ப வேண்டும், மேலும் இந்திய கடல் எல்லைகள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளது, போரின் போது ஒரு வேளை சீன கப்பல்கள் இந்திய கடல் எல்லையிலோ அல்லது கடல் எல்லைக்கு அருகிலோ தென்பட்டால், கண்டிப்பாக தாக்கி அழிக்கப்படும், இந்திய அமெரிக்க கப்பற்படை ஒப்பந்தத்தின் படி சீனாவின் போர்க்கப்பல்கள் நகர்வு குறித்து இந்தியாவுக்கு எப்போதும் அமெரிக்கா தகவல்களை தந்து கொண்டே இருக்கும்.

அதனால் தற்கொலைக்கு சீன கப்பல் படை முயற்சிக்காது.   இந்தியாவின் ப்ரமோஸ் போரில் பெரிய பங்காற்றும் என்று எண்ண வேண்டாம், இந்த ராணுவத்தில் சுமார் 900-க்கும் குறைவான ப்ரமோஸ் ஏவுகணைகள் உள்ளன, அதில் சுமார் 600 தான் சீனா எல்லையில் நிலை நிறுத்தப்படும், இவை சீன ஆர்டிலரி தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அழிக்க மட்டுமே பயன்படுத்தப்படும்.

  • Rajasekaran Thiyagarajan

    அருமையான கட்டுரை .நிலைமையை உணர முடிகிறது .