அத்து மீறிய சீனா, கடிவாளம் போட்ட இந்திய ராணுவம்

  ஜூன் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து இந்திய சீனா பூடான் எல்லையில் குறிப்பிட தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது, இருந்தாலும் பல காரணங்களுக்குகாக அதை வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டது மூன்று நாடுகளும், ஆனால் மோடி அமெரிக்கா செல்லும் சில நாட்களுக்கு முன்னால் மொத்த கதையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டதோடு, பூடான் நாடும் கொஞ்சம் தைரியமாக குரல் கொடுத்துள்ளது. இந்த பிரச்னையில் சீனாவில் மூக்கு அறுபடும் அல்லது ஏற்கனவே அறுக்கப்பட்டிருக்கும் என்பதே உண்மை.

இந்திய சீன பூடான் எல்லைகள் ஓரிடத்தில் டோகா லா  என்ற பகுதியில் சங்கமிக்கிறது, அது ஒரு உயர்ந்த மேடு, மட்டுமல்லாது அது ஒரு மலை உச்சி என்றே கூற முடியும், இந்த பெரிய மலை தான் இயற்கை அரணாக இருந்து இந்தியா பூடான் நாடுகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. அதாவது இந்த மலை முகடு அல்லது இயற்கை அரண், சீனாவுக்கு இந்திய தாக்குதலிலிருந்தும், இந்தியாவுக்கு சீன தாக்குதலிலிருந்தும் பாதுகாப்பு கொடுக்கும்.

யாராவது ஒருவர் மலை உச்சியை கைப்பற்றி விட்டால், அவர் அடுத்த நாட்டை எளிதாக தாக்கி பலத்த சேதத்தை உண்டாக்கி விட முடியும். இதை தவிர்ப்பதற்காகவே மூன்று நாடுகளும் பரஸ்பரம்  பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. நாளாக நாளாக சீனா மெதுவாக இந்தியாவை சீண்டி பார்த்து மலை உச்சி வரை நல்ல தரமான ரோடுகளையும் அமைத்து, அதோடு ராணுவ தளங்களை மலைக்கு கீழே அமைத்து வீரர்களையும் குவித்து வைத்துள்ளது. தோராயமாக சுமார் 3000 வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள். மேற்படி அதிகமான சீன படைகள் மிக எளிதில் வரவும் தங்கவும் வசதிகள் உருவாக்கப்பட்டு விட்டன.

இதை எதிர்த்த இந்தியா, தன்  பங்குக்கும் பல வேலைகளை மலை அடிவாரத்தில் செய்துவிட்டது, தோராயமாக சுமார் 90,000 இந்திய ராணுவம் இந்திய சீன எல்லையில் தற்போது பணியில் உள்ளது, சீன முயற்சிக்கும்  எந்த ஒரு அத்து மீறலுக்கும் உடனடியாக பதில் கொடுக்கும் வண்ணம் இந்தியா உள்ளது.

கேள்வி எழலாம், இந்தியாவின் 90,000 வீரர்கள் அங்கு உள்ளனர், சீனா வெறும் 3000 மட்டும் தானா என்று. இது சரியான தகவல் தான், ஆனால் சீனாவின் 3000 வீரர்கள் சம்பவம் நடந்துவரும் இந்தோ பூடான் சீன எல்லையில் உள்ளனர், 90,000 இந்திய வீரர்கள் மொத்த இந்திய சீன எல்லையையும் காத்து வருகின்றனர், அதாவது காஸ்மீர் முதல் அருணாச்சல வரை. இந்திய அரசு குறிப்பிட்ட அந்த சங்கமிக்கும் எல்லையில் எவ்வளவு இந்திய வீரர்கள் இருக்கின்றனர் என்று செய்தியை  வெளியிடவில்லை. இருந்தாலும் போதிய அளவு வீரர்கள் அங்கு இருப்பார்கள் என்பதே உண்மை.

  சரி, இந்திய எல்லையை சீண்டினால் தானே பிரச்னை என்று, பூடான் எல்லைக்குள் நுழைந்து அந்த உயர்ந்த மலைப்பகுதியை கைப்பற்றி விடலாம் என்று எண்ணி, பூடான் எல்லையில் உள்ளை மலை உச்சி வரை உறுதியான சாலைகளை அமைத்தது, அதோடு மலை உச்சிக்கு தளம் அமைக்கும் உபகாரணங்களோடு வந்துவிட்டது சீனா, பதறிப் போன பூடான் ராணுவம் நேரடியாக சீன வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு திரும்பிவிட்டது.

சீனாவுக்கும் பூடானுக்கும் எந்தவித அரசியல் உறவுகளும் இல்லை என்பதால், இந்தியா மூலம் சீனாவுக்கு கடும் கண்டனங்களுடன் தனது எதிர்ப்பை பதிவு செய்தது, இவை நடந்து ஜூன் 16-17 தேதிகளில், அப்போதும் இந்த செய்தி ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

இங்கு வேறொரு தகவலையும் குறிப்பிடவேண்டும், இந்தியாவுக்கும் பூடானுக்கும் ராணுவ மற்றும் அரசியல் ஒப்பந்தம் உள்ளது, அதாவது பூடான் நாட்டை காப்பது, இந்தியாவை எவ்வாறு இந்தியா காக்கிறதோ அது போல பூடானையும் காக்க வேண்டும் என்பதே அதன் சுருக்கம்.

பூடான் நாட்டின் மலை உச்சியில் மையம் கொண்ட சீன வீரர்களை எதிர்க்க சில மணி நேரங்களிலேயே சுமார் மூன்று லாரிகள் நிறைய இந்திய வீரர்கள் சென்றனர், அதோடு சீனா ஏதேனும் கட்டுமானம் அந்த பகுதியில் ஏற்படுத்தியிருந்தால் அதை தரைமட்டமாக்க புல்லடோசர்களுடன் இந்திய ராணுவம் சென்றது, அங்கு தள்ளு முள்ளு மட்டுமல்ல ஓரளவு வார்த்தை துஷ்பிரயோகமும் ஏற்பட்டுள்ளது. வேறு வழியில்லாமல் சீன ராணுவம் தனது பரிவாரங்களுடன் பூட்டான் எல்லையை விட்டு வெளியேறியது.இந்த படங்களை தான் சீன வெளியுறவுத்துறை, இந்தியாவின் அத்துமீறல் என்று ஊடகங்களுக்கு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

இதனால் ஆத்திரமடைந்த சீனா, வேறுபக்கம் தனது வேலையை காட்டியது, இந்திய எல்லையில் இருந்த பயன்படுத்தப்படாமல் இருந்த பதுங்கு நிலைகளை அழிக்க ஆரம்பித்தது, வீரர்கள் யாரும் அங்கு இல்லாததால் இரண்டு பதுங்கு குழிகளை அழித்தது, மூன்றாவது பதுங்கு நிலையை நெருங்கிய போது இந்திய ராணுவம் அங்கு வந்துவிட்டது, அது இந்திய ராணுவமா இல்லை ITBP காவல் துறையா என்று சரியாக தெரியவில்லை, இருந்தாலும் மேற்கொண்டு சீனா ஏதும் வேலைகள் அங்கு செய்யாமல் இருக்க அவர்கள் தடுத்து விட்டனர். அந்த வீடியோ தான் ஊடகங்களில் வெளியானது.

இரண்டு பக்கமும் எதிர்ப்பு கிளம்பியதால் ஓரளவு விரக்தியில் இருந்த சீனா, பிரதமரின் அமெரிக்கா பயணத்தின் போது ஊடகங்கள் இதை கிளப்பி விட்டதால், வேறு வழியில்லாமல் சீனாவையும் தான் பங்குக்கு ஊடகங்களில் செய்தி வெளியிட்டது, அது மட்டுமல்லாது அரசே முன்வந்து ஊடகங்களுக்கு தகவலை வழங்கியது.

இந்தியா தேவை இல்லாமல் பூடானின் உள்நாட்டு விவாகரங்களில் தலையிடுவதாகவும். சர்ச்சைக்குரிய டோகோலாங் பகுதி பிரச்சனையை பூடானும் சீனாவும் தான் பேசி தீர்க்க வேண்டும் என்றும், இந்தியா அதில் தலை இடக்கூடாது என்றும் கூறியது, ( எந்த சர்ச்சையும் இல்லாத டோக்கோலங் பகுதி எல்லையை திடீரென சர்ச்சைக்குரிய பகுதி என்று சீனா அந்த கூட்டத்தில் பேசியது குறிப்பிட தக்கது )

இதிலும் சீனாவுக்கு கோபம் என்னவென்றால், பூடான் எல்லைக்குள்ளும் வந்து இந்திய ராணுவம் சீனர்களை எதிர்த்து தான், அதனால் தான் 1962 போரை இந்தியா மறந்து விடக்கூடாது என்று நேரடியாகவே அறைகூவல் விடுத்தது.   சீனாவின் இந்த போக்கை இந்தியா கொஞ்சம் சீரியஸாகவே எடுத்துள்ளது தெளிவாக விளங்குகிறது, ஒரு வேளை இந்தியா அமைதியாக இருந்திருந்தால் பூடானின் எல்லையில் உள்ள மலை உச்சியை கைப்பற்றி தளம் அமைத்திருக்கும், அதோடு இந்தியாவுக்கு நேரடியாகவே மிரட்டல் விடுத்து  அடிபணியவைத்திருக்கும்.

அங்கு பணியில் இருந்த முன்னாள் ராணுவ அதிகாரி கூறும் போது, ஒரு வேளை சீனா மலை உச்சியை அடைந்துவிட்டால் சில்குரி டார்ஜெலிங் போன்ற முக்கிய இந்திய நகரங்களை  சீனா தான் பார்வையில் வைத்திருக்கும், போரின் முதல் சில மணி நேரங்கிலேயே இந்த நகரங்களை அழித்து தரைமட்டமாக்கி இருக்கும் என்கிறார், ஒருவேளை சீனா மலை உச்சியை கைப்பற்றி படைகளையும் தளவாடங்களையும் குவித்தால் நிச்சயம் இந்தியா முதலில் தாக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகும். போர் வர அதிகப்படியான வாய்ப்புகளும் இருக்கும் என்கிறார்.

1962, மற்றும் 1967 ஆண்டுகளில் நடை பெற்ற போர்கள் இது போன்றவையே என்பதும் குறிப்பிடதக்கது.

சீனா மலை உச்சியை கைப்பற்றினால் இந்தியா தனது விமானப்படையால் எளிதில் சீன நிலைகளை தாக்கி அழிக்க முடியும், இங்கு தான் நாம் ரஷ்யாவுக்கு நன்றி கூற வேண்டும், இந்தியா தனது விமானப்படையை பயன்படுத்தி சீன நிலையை தாக்கி அழிக்காதவாறு பாதுகாக்க அதி நவீன S400 ஏவுகணைகளை கொடுத்துள்ளது, அதோடு தளத்தை பாதுகாக்க Su 35 நவீன போர் விமானங்களையும் கொடுத்துள்ளது. இதனால் இந்திய விமானப்படை தான் போர் விமானங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இருந்தாலும் மலை உச்சியினை சீனா ஒரு வேளை கைப்பற்றினால், கண்டிப்பாக நாம் அதிக விலை கொடுத்தே நமது எல்லைகளை பாதுகாக்க வேண்டி வரும் என்பதில் ஐயமில்லை.

China India Bhutan Border