அரசால் ரத்து செய்யப்படவுள்ள முக்கிய ராணுவ ஒப்பந்தங்கள்

சுமார் 3-5 பில்லியன் டாலர் அளவுள்ள ராணுவ ஒப்பந்தங்களை ரத்து செய்ய அரசு
திட்டமிட்டுள்ளதாக  பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இதனால் ராணுவம்  தரம் குறைந்த ஆயுதங்களுடன் போரை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று தெரிகிறது, ராணுவத்தின் தரத்தை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் ஆடிட்டர்கள் தொடர்ந்து தரம் குறைந்த ஆயுதங்கள் பற்றி விமர்சித்தும் அறிக்கை அளித்தும், அது குறித்து எதுவும் கேட்காமல் அரசு தொடர்ந்து இது போன்ற வேண்டாத வேலைகளை செய்து வருகிறது.

முக்கியமாக ராணுவம் சுமார் பதினோராயிரம் கோடி செலவில் உடனடியாக தாக்கும்
எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் QR-SAM எனப்படும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க முடிவெடுத்து ரஷ்யாவின் சோஷனா அமைப்பை தேர்வு செய்திருந்தது, இவை ராணுவத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் தூங்குஸ்கா, ஸ்டெர்லா மற்றும் OSA-AK எனப்படும் QR SAM- களுக்கு மாற்றாக
படையில் பயன்படுத்தப்படும் .

 

m3t6Qm1Cvg4
தூங்குஸ்கா, ஸ்டெர்லா மற்றும் OSA-AK

இவைகள் வேறு எந்த உதவி அமைப்புகளுமின்றி தன்னிச்சையாக இயங்கக்கூடியவை,
இது போர் களத்தில் ராணுவத்தின் படைப்பிரிவுகளுக்கு வான் பாதுகாப்பை கொடுக்கும், அதே நேரம் ஒரே ஒரு வாகனத்தில்  மொத்த அமைப்பும் இருப்பதால் எதிரியால் இதை தனியே பிரித்தறிந்து தாக்குவது மிகக்கடினம். மேலும் இதனால் மிக வேகமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு  செல்லவும் முடியும், அதன் மூலம் ராணுவம் முன்னேறி செல்லும் போது இவையும் சேர்ந்தே முன்னேறி படைகளுக்கு தகுந்த வான்பாதுகாப்பை கொடுக்கும்.

அரசு இந்த QR-SAM திட்டத்தை ரத்து செய்து, உள்நாட்டு தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணைகளை ராணுவத்துக்கு கொடுக்க முடிவெடுத்துள்ளது, ஆகாஷ் குறுகிய தூர
வான் பாதுகாப்பு ஏவுகணை, அதோடு சுமார் 5  முதல் 8  வாகனங்கள் அடங்கிய ஒரு
அமைப்பு, இதனால் எளிதில் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்துக்கு செல்ல முடியாது அதோடு இதை நிறுவி செயல்பாட்டுக்கு கொண்டுவர சுமார் 2  மணி நேரம் ஆகும், அதோடு எதிரியால் இதன் ராடாரை வைத்து இதன் இடத்தை எளிதாக அறிந்து தாக்கி விட முடியும்.

இதன் மூலம் ராணுவத்தின் தாக்குதல் படைகளுக்கு தகுந்த வான் பாதுகாப்பு கிடைப்பது என்பது கேள்விக்குறியாகியுள்ளது, தற்போதைய நவீன யுத்த களத்தில் சிறிய ஆளில்லா தாக்கும் விமானங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது, அதோடு தாக்கும் ஹெலிகாப்டர்கள் மிக தாழ்வாக பறந்து இலக்குகளை தாக்கக்கூடியவை, இவையும் தொலைதூர ராடார் கண்களில் படாது.

ஆக சில உதாரணங்கள் மூலமே அரசின் இந்த முட்டாள்தனமான நடவடிக்கை ராணுவ
தாக்கும் அமைப்புகளின் திறனை வெகுவாக குறைத்துள்ளது, இதன் மூலம் ராணுவம்
போரின் போது எல்லை தாண்டி செல்லும் போது பெரிய அளவு அபாயத்தை
எதிர்நோக்கவுள்ளது.

அடுத்ததாக கப்பல் படைக்கு என்று வாங்கவிருந்த அமெரிக்காவின் S 70 B என்னும் நீர்மூழ்கியை கண்டறிந்து தாக்கும் ஹெலிகாப்டர்கள், உலகின் முன்னணி ASW ஹெலிகாப்டரான இது இந்திய கப்பல் படையின் நவீன கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் வகை போர் கப்பல்களில் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் இதன் விலையை காரணம் கூறி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவில் அரசு உள்ளதாக அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் பற்றி ஏற்கனவே விரிவாக இங்கு விளக்கப்பட்டுள்ளது http://www.tamildefense.com/?p=863 .

பல காலமாக தள்ளி வைக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவது குறித்து கப்பல் படை வருத்தம் தெரிவித்துள்ளது, ஏற்கனவே கப்பல் படையின் நீர்மூழ்கி அழிக்கும் திறன் போதிய உபகரணங்கள் இல்லாததால் அதல பாதாளத்தில் உள்ளது, தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படவுள்ளதால் அதன் திறன் என்னவாகப்போகும் என்று தெரியவில்லை.

இதற்கும் அரசிடம் அதி பயங்கர திட்டம் உள்ளது, ஏற்கனவே கப்பல் படையால்
நிராகரிக்கப்பட்ட, CAG தணிக்கை குழுவால் விமர்சிக்கப்பட்ட HAL நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட துருவ் ஹெலிகாப்டரில் மாறுதல் செய்து SONAR பொருத்தி கப்பல் படைக்கு கொடுக்கும் திட்டமே, அது மட்டுமல்லாது S 70 B ஹெலிகாப்டர் வாங்கும் போது அதனுடன் நவீன கப்பல்களை, நீர்மூழ்கிகளை அழிக்கும் டோர்ப்பீடோக்களும் வாங்க திட்டமிடப்பட்டிருந்தது, தற்போது அதுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த உள்நாட்டு Dhurv ASW ஹெலிகாப்டர் திறன் குறைந்த அமைப்பு மட்டுமன்றி,
போரில் சரியாக செயல்படுமா என்று கூட தெரியாத நிலையில் படையில் சேர்க்க
நிர்பந்திக்கப்பட்டுள்ளது, ஆய்வுகளிலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்ட இந்த
ஹெலிகாப்டரை அரசு எவ்வாறு கப்பல் படையிடம் திணிக்கிறது என்று யூகிக்க கூட
முடியவில்லை.

அதோடு போலந்து நாட்டிடமிருந்து சுமார் 1800 கோடி செலவில் சுமார் 204 ARV-களை வாங்க ராணுவம் திட்டமிட்டிருந்தது, இவை டாங்கிகளில் பழுது ஏற்பட்டாலோ, அல்லது டாங்கிகள் கவிழ்ந்தாலோ அவற்றுக்கு உதவி செய்து மீண்டும் சண்டையிடும் நிலைக்கு கொண்டு வரும், பொதுவாக எல்லா டாங்கி பிரிவுடனும் ஒன்று அல்லது இரண்டு இது போன்ற உதவி வாகனங்களும் செல்லும். ராணுவத்தில் ஏற்கனவே இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றது, தற்போது கூடுதல் எண்னிக்கை கோரப்பட்டுள்ளது அது அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது.