படையிலிருந்து விலக்கப்பட்ட டாங்கிகளை எல்லை அருகில் உள்ள நிலைகளில் பயன்படுத்தும் ராணுவம்

இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பதுங்கு நிலைகளை தாக்கி அழிக்கும் ஒரு வீடியோ சமீபத்தில் வெகுவாக பரவி வந்தது, அது இந்திய ராணுவ வீரர்களை கொன்று அவர்களின் உடல்களை சேதப்படுத்தியதற்காக என்று பரவலாக கூறப்பட்டாலும், இது அச்சம்பவம் நடப்பதற்கு முன்பே நடத்தப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு சில முன்னாள் ராணுவ அதிகாரிகளிடம் கேட்டபோது, சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவத்தில் முன்பு  சுமார் 2000 விஜயந்தா டாங்கிகள் இருந்தன, அவை அனைத்தையும் 2000-தில் படையிலிருந்து விலக்கியது ராணுவம், ஆனால் விலக்கப்பட்ட  அந்த டாங்கிகளை ராணுவத்தின் வீரர்களுக்கு கொடுத்துள்ளது டாங்கி பிரிவு, தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் ராணுவத்தின் தாக்கும் முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையே காட்டுகிறது.

இந்தியாவின் எல்லை அருகே உள்ள ராணுவத்தின் நிலைகள் மிகுந்த வருத்தமான நிலையில் உள்ளது, வீரர்களுக்கு போதிய பாதுகாப்போ சண்டை இட தகுந்த பாதுகாப்பாயோ வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது,

வெளியான அந்த வீடியோவில் பாகிஸ்தானின் பெரிய ஒரு பதுங்கு நிலை தரைமட்டமாக்கப்பட்டது கண்கூடாக தெரிகிறது, முதலில் டாங்கிகளை எதிர்க்கும் ஏவுகணை மூலம் சுட்ட ராணுவம் தொடர்ந்து டாங்கிகளையும் மோர்ட்டார்களாயும் கொண்டு சுட்டு ஒரு நிமிட நேரத்திற்குள் அந்த ராணுவ நிலையை தரைமட்டமாக்கியது.

அந்த தாக்குதலில் மோர்ட்டார் தான் பயன்படுத்தப்படு என்று சிலர் கூறினாலும், டாங்கியும் பயன்படுத்தப்பட்டது என்றும் சிலர் கூறுகிறார்கள்,  குண்டுகளை பார்க்க முடியாதது தான் இதற்கு முக்கிய காரணம்.

சில ராணுவ அதிகாரிகள் கூறுகையில் எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ நிலைகளில் படையிலிருந்து விலக்கப்பட்ட டாங்கிகள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்துள்ளனர், முக்கியமாக விஜயந்தா மற்றும் T 55 டாங்கிகள், ராணுவத்தின் டாங்கி பிரிவு அதிகாரி கூறும் போது தற்போதைய சூழலில் சண்டையிட தகுதியில்லாத இந்த டாங்கிகளின் துப்பாக்கிகள் இன்றும் நல்ல நிலையில் இருப்பதால் எல்லைப் பாதுகாப்புக்கு உதவும், அதனால் அவைகள் தரைப்படை பிரிவுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஆராய்ந்து பார்த்ததில், இந்த டாங்கிகள் தங்கள் போக்குவரத்து சக்தியை இழந்து விட்டதாகவும், ஆனாலும் அதன் துப்பாக்கிகள் இன்றும் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது, அதை வைத்தே எதிரி நிலைகளை தாக்கியதாகவும் தெரிகிறது, செலவு குறைவு மற்றும் சுடும் வீரர்களுக்கு பாதுகாப்பும் கொடுப்பதால் இது ஒரு நல்ல முயற்சி என்றே தெரிகிறது.

இந்திய எல்லை அருகே இது போன்ற பாகிஸ்தானிய நிலைகள் அதிகம் உள்ளது, அவை அனைத்தையும் இது போல தாக்கி அழித்தால் மட்டுமே எல்லையில் அமைதி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது, அதற்கு உரிய கட்டளையை அரசு தான் பிறப்பிக்க வேண்டும்