அதிக தூரம் கண்காணிக்கும் ரேடர்களை கட்டியுள்ளது சீனா.

சமீபத்தில் இணைய பயன்பாட்டாளர்கள் கூகுல் MAP- ல் சீனாவை ஆராய்ந்த போது, சீனாவில் மிகபெரிய ஒரு ராடர் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருப்பதுதெரியவந்தது, மேலும் இது போல வேறும் பல ராடர் நிலையங்களையும் சீனா கட்டியிருக்கும் என்றும் ராணுவ கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்,

இந்த ராடார் மூலம் சுமார் 5,500 கிலோ மீட்டருக்கும் தொலைவில் வரும் இலக்கையும் மிக சரியாக கணிக்க முடியும் என்றும், இதன் மூலம் எதிரி நாட்டின் அணு குண்டுவீசும் ஏவுகணைகளின் நிலையையும் துல்லியமாக கணிக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் சீனாவின் பாதுகாப்பும் அதே நேரம் கண்காணிக்கும் திறனும் அதிகரிக்கும்.

Xinjiang பகுதியில் உள்ள ராடார் நிலையம் ரஷ்யாவையும் , Fujian பகுதியில் உள்ளது அலாஸ்கா மற்றும் ஜப்பானையும் கண்காணிக்கும் என்றும், புதிதாக அமைக்கப்பட்ட நிலையம் இந்தியாவையும் தெற்கு பகுதிகளையும் கணிக்கும் என்றும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இது போன்ற பெரிய ராடார் நிலையங்கள் அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாடுகளிடம் மட்டுமே உள்ளது