அமெரிக்காவின் MOAB, இந்தியாவிடம் என்ன உள்ளது

சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் சுமார் 11,000 டன் TNT திறனுள்ள பயங்கரமான குண்டை வீசி ISIS தீவிரவாதிகளைக் கொன்றது, உலகெங்கும் அது குறித்து பரவலாக பேசப்படவே, அணு குண்டு இல்லாத ஆனால் அதிக சக்தியுடன் வெடிக்கக்கூடிய குண்டுகளைப் பற்றிய ஆர்வம் பலரிடம் ஏற்பட்டது, அமெரிக்காவின் MOAB குண்டை விட ரஷ்யா அதிக அளவு திறனுள்ள குண்டை வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாக சுற்று சூழலுக்கு அதிகம் பாதிப்பு இல்லாத மக்களை கொடூரமாக கொல்லாத குண்டுகளை போரில் பயன்படுத்த எவ்வித தடையும் இல்லை. அதனால் கூட்டமாக மக்களையோ போர் வீரர்களையோ கொல்ல பெரிய குண்டுகள் தேவைப்பட்டது, எளிதான ஒரே முறை குண்டுகள் மூலம் பெரிய தீப்பிழம்பை வெளியிட்டு மக்களை கடும் வெப்பத்தில் தீக்கிரையாக்குவதே.

இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட Flame Thrower

சிறிய பதுங்கு குழிகள், கட்டடங்களுக்குள் மறைந்திருந்து தாக்குபவர்களை திருப்பி தாக்குவது என்பது கடினம், அவற்றை அழிப்பதற்கு அதை தீயிட்டு கொளுத்துவதே ஒரே வழி, அதனால் இரண்டாம் உலகப்போரில் பெரும்பாலும் வீரர்கள் குழுவிடம் ஒரு தீப்பிழம்பை கக்கும் Flame Thrower  என்னும் ஆயுதங்கள் இருந்தன.

பொதுவாக இப்படி அதிகம் தீயை கக்கும் ஆயுதங்களை HE ( High Explosive ) என்றே அழைப்பர், அது எந்த வடிவில் இருந்தாலும் சரி, இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இது போன்ற அதிக தீயை வெளியிடும் ஆயுதங்களை உருவாக்க பல நாடுகளும் முயற்சி கொண்டன, அதில் தெர்மோபாரிக் மற்றும் நேபால்ம் என்ற இரண்டு வகையான வெடி பொருட்கள் உருவாக்கப்பட்டது.

நேபால்ம் குண்டை தயாரித்த இஸ்ரேல் நாடு பின்னர் நடந்த அரபு நாடுகளுடனான யுத்தத்தில் அதை பெரிதும் பயன்படுத்தியது, அதன் திறனும் அபரிமிதமாக இருந்தது, பல இடங்களில் போரின் போக்கையே மாற்றியது இந்த நேபால்ம்.

நேபால்ம் குண்டின் சக்தி

இது மிக எளிதாக செய்யக்கூடிய குண்டு, எளிதில் தீப்பிடிக்கும் திரவத்தை தீப்பொறி மூலம் பற்ற வைத்து பயங்கரமாக பற்றி எரிய செய்யக்கூடியது, விமானத்திலிருந்து வீசப்படும் குண்டு குறிப்பிட்ட உயரத்தை அடைந்தவுடன் அது எளிதில் பற்றி எறியும் திரவத்தை காற்றில் பரவ செய்து விடும், திரவமும் தீர்ந்தவுடன் குண்டு சிறிதாக வெடித்து தீப்பொறியை உண்டாக்கும் அது காற்றில் உள்ள திரவத்தோடு இணைந்து பயங்கரமாக பற்றி எரியும், இன்றும் பல நாடுகள் நேபால்ம் குண்டுகளை படையில் வைத்துள்ளன.

ஆனால் தெர்மோபாரிக் அதை விடக் கொடியது, இது காற்றில் உள்ள ஆக்சிஜனை உறிஞ்சும் வேதிப்பொருட்களை வெளியிட்டு பின்பு பற்ற வைத்து வெடிக்க செய்யும், இதனால் பயங்கர அதிர்வு, கடும் வெப்பம் மற்றும் வெளிச்சம் அதோடு மிக பயங்கர தீயும் வெளிவரும், ஆனால் இதை எல்லா சூழ்நிலையிலும் பயன்படுத்த முடியாது, காற்றின் தன்மை மற்றும் பருவ சூழ்நிலையை வைத்தே பயன்படுத்த முடியும். ஆனால் குகைகள், பதுங்கு குழிகள், கட்டடங்களுக்குள் இதை வெடிக்க செய்தால், அதன் உள்ளே இருக்கும் எல்லா உயிர்களையும் தீக்கிரையாக்கிவிடும்.

ரஷ்யாவின் தேர்மோபாரிக் ராக்கெட்டுகளை வீசும் அமைப்பு TOS 1A

சமீபத்தில் அமெரிக்காவின் MOAB குண்டிலும் இதே தெர்மோபாரிக் குண்டு தான் பயன்படுத்தப்பட்டுள்ளது, சுமார் 8500 கிலோ அளவு தெர்மோபாரிக் கலவை அந்த குண்டிலுள் வைத்து வீசப்பட்டுள்ளது. ரஷ்யாவின் FOAB  எனப்படும் குண்டிலும் இதே தெர்மோபாரிக் கலவை தான் இருக்கும், ஆனால்  அதன் வேதிப்பொருட்களின் கலவை வேறுபடலாம்.  சிரியப் போரிலும் ரஷ்யா சிறிய வகை தேர்மோபாரிக் ராக்கெட்டுகளை பயன்படுத்தி வருகிறது

இந்தியாவிடமும் இது போன்ற தெர்மோபாரிக் கலவை உள்ள குண்டுகள் பயன்பாட்டில் உள்ளது, ஆனால் அவை அளவில் மிக சிறியவை, இந்திய ராணுவம் அதிக அளவு கார்ல் குஸ்தாவ் ராக்கெட் வீசும் அமைப்பை பயன்படுத்துகிறது, சில நேரங்களில் இவற்றில் தெர்மோபாரிக் குண்டுகளை வைத்தும் சுடும். இதனால் வீடுகளில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை கொல்வது மிக எளிதே.

பம்பூரில் நடந்த தாக்குதலில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டிடத்தை மொத்தமாக தீக்கிரையாக்கிய ராணுவம்

இந்தியாவால் மிக பெரிய ஒரு தெர்மோபாரிக் குண்டை உருவாக்க முடியுமா என்றால் முடியும். இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த ஏரோ ஷோ-வில் விமானப்படையின் ஆராய்ச்சி கூடத்தில் தயாரிக்கப்பட்ட குண்டுகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது, சுமார் 100 கிலோமீட்டர் வரை தாக்கும் கருத்மா மற்றும் 30 கிலோமீட்டர் வரை சென்று  தாக்கும் கருடா என்ற குண்டுகள். இவை தலா 1000 கிலோ எடையுள்ளவை, மேலும் இதில் சுமார் 900 கிலோ அளவு எடையுள்ள வெடி பொருளை நிரப்ப முடியும். இந்த குண்டுகள் விமானப்படையின் சுகோய் மற்றும் ஜாகுவார் விமானத்திலிருந்து ஏவுமாறு வடிவமைக்கப்பட்டு ஏற்கனவே சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த குண்டுகளில் தெர்மோபாரிக் அல்லது ICL 20 என்னும் பயங்கர வெடிபொருட்களை நிரப்பி எதிரி மீது வீச முடியும்.

ICL 20

இது இந்தியாவின் DRDO-வின் தயாரிப்பில் உருவான ஒரு வேதிக்கலவை, RDX வெடி பொருளை விட சுமார் 60  மடங்கு சக்தி வாய்ந்தது. அமெரிக்காவில் முதல் முதலாக உருவாக்கப்பட்ட இந்த வேதிக்கலவையை இந்தியாவின் DRDO-வும் உருவாக்கியுள்ளது, மேலும் இன்னும் சில ஆண்டுகளில் இதை ராணுவத்துக்கு வழங்கவும் முடிவெடுத்துள்ளது, ஆனாலும் இதன் தயாரிப்பு ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும் DRDO ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஆனால் இதன் விலை காரணமாக அதிகமாக இதை தயாரிக்க முடியாது என்றும் DRDO தெரிவித்துள்ளது, உதாரணமாக ஒரு கிலோ அளவு RDX வெடி பொருளை தயாரிக்க சுமார் 750 ருபாய் செலவாகும், அதே நேரம் ஒரு கிலோ CL 20 வெடி பொருளை தயாரிக்க 70,000 ரூபாய் செலவாகும்,

ஒரு தேர்மோபாரிக் கலவையுடன் கூடிய 1000 கிலோ குண்டை செய்ய சுமார் ஒன்றரை கோடி ருபாய் செலவாகும், அதே நேரம் CL 20 கலவையுடன் கூடிய 1000 கிலோ குண்டை செய்ய சுமார் எட்டு கோடி ருபாய் வரை செலவாகும். இருந்தாலும் பாகிஸ்தானுடன் அல்லது சீனாவுடன் போர் என்று வந்தால் இந்த விமானப்படை CL 20 வெடி பொருளுடன் கூடிய குண்டுகளை வீசும் என்பதில் ஆச்சர்யம் இல்லை.

அதோடு ஒரு சில தகவல்கள்படி இந்திய ராணுவம் HE குண்டுகளுக்கு பதிலாக தேர்மோபாரிக் குண்டுகளையும், விமானப்படை அதிக வெடி சக்திக்காக CL 20 குண்டுகளை பயன்படுத்தும் என்று தெரிகிறது.

ஆக போர் என்று வரும்போது பாகிஸ்தானுக்கு இந்திய விமானப்படை பயங்கரமான தீப்பிழம்பை பரிசளிக்கும் என்பதில் ஐயமில்லை, CL20 வெடி பொருளுடன் கூடிய கருத்மா குண்டு அமெரிக்காவின் MOAB குண்டின் சக்தியில் பாதியளவு சக்தியை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடதக்கது

இந்த குண்டை சுகோய் விமானத்தில் மூன்றும், ஜாகுவார்  ரபால் மற்றும் மிராஜ் விமங்களில் தலா ஒன்றும் எடுத்து செல்ல முடியும்.