கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய வட கொரியா காலதாமதம் ஏன்

பொதுமக்களை அடிமைப்படுத்தி ஒரு சில வல்லரசுகளின் நிழலில் வாழும்
காட்டுமிராண்டிகளின் ஆட்சி நடக்கும் நாடு தான் வட கொரியா, வறுமையிலும்
தனது மக்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அதி நவீன ஆயுதங்கள் மற்றும்
அணு குண்டுகள் மூலம் அண்டை நாடுகளை அசச்சுறுத்துவது மட்டுமன்றி சொந்த
மக்களை கொடூரமாக கொலை செய்து வருவதும் வட கொரியாவே.

ஐ நா- மனிதாபிமான அடிப்படையில் இன்றும் வட கொரிய மக்களுக்கு உதவி
வருகிறது, அதனால் மக்களை பற்றி கவலைப்படாமல் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு அண்டை நாடான தென் கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் தொடர்ந்து தொல்லை
கொடுத்து வருகிறது.

வட கொரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா அதி நவீன MiG 29 விமானங்கள் கப்பல்களை
தாக்கும் Kh 35 போன்ற போர் ஆயுதங்களையும், சீனா மற்ற பொருளாதார
உதவிகளையும் செய்து வருகிறது. இதனால் எந்த கவலையுமின்றி தொடர்ந்து தனது
அணு ஆயுத சோதனையில் முன்னேறி வருகிறது.

வட கொரியாவை இப்படியே விட்டு விட்டால் அதன் அணு ஆயுதங்கள் விரைவில் கள்ள
சந்தையில் கிடைக்கும் என்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை, பாகிஸ்தான்
ஈராக் சிரியா  வரை அதன்  தொடர்புகள் உள்ளது அறிந்த ஒன்றே

அதற்கு அடுத்தபடியாக நீர்மூழ்கியிலிருந்து அணு ஆயுத ஏவுகணைகளை சோதனை
செய்து வருகிறது, இது முழுவதும் வெற்றிபெறும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு
இது எளிதில் கிடைத்துவிடும், பதிலுக்கு பாகிஸ்தானும் பேரழிவு ஆயுதங்களை
வட கொரியாவுக்கு வாரி வழங்கும்.

ஒபாமாவின் ஆட்சி காலத்தில் வட கொரியா தனது அணு ஆயுத சோதனையில் மிகவும்
முன்னேற்றம் கண்டுவந்தது, இதை பகிரங்கமாக எதிர்த்த ஜப்பான், வட கொரியா
ஏவுகணை சோதனை நடத்தினால் ஜப்பான் கப்பல் படை அதை தாக்கி அழிக்கும் என்று
பகிரங்கமாக அறிவித்தது, வட கொரியாவுக்கு ஆதரவாக ஜப்பானுக்கு அச்சுறுத்தல்
தர சர்ச்சைக்குரிய குறில் தீவுகளில் ஏவுகணைகளையும் ராணுவத்தையும்
குவித்தது ரஷ்யா, அதோடு ஜப்பான் கடற்பகுதிக்கு அருகில் தனது குண்டு
வீசும் விமானங்களை தொடர்ந்து பறக்க செய்து ஜப்பானுக்கு தொடர்
அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது.

வட கொரியாவின் ராணுவத்தில் சுமார் 22,000 ஆர்டில்லரி துப்பாக்கிகள்
உள்ளது, அவை அனைத்தும் ஒரு முறை சுட்டால் போதும் தென் கொரிய தலைநகரான
சியோல் கடும் பாதிப்புக்கு உள்ளாகும், மிகப்பெரிய பொருளாதார பேரிழப்பு
ஏற்படும். போர் என்று வந்தால் முதல் இரண்டு மணி நேரம் வட கொரியாவின் கையே
ஓங்கி இருக்கும், ஒரு மணி நேரத்தில் தனது 70% ஆர்டில்லரி துப்பாக்கிகளை
எல்லைக்கு அருகில் கொண்டு வந்து அடுத்த ஒரு மணி நேரம் தொடர்ந்து சியோலை
தாக்கும், தோராயமாக போரின் முதல் ஒரு மணி நேரத்தில் தென் கொரியாவின் தலை
நகர் சியோல் சுமார் 5 லட்சம் குண்டுகளுக்கு இரையாகியிருக்கும் இதனால்
ஏற்படும் பொருளாதார மற்றும் மனித உயிர் இழப்பு மிக பயங்கரமாக இருக்கும்.

இந்த ஆர்டில்லரி துப்பாக்கிகளின் எண்ணிக்கையை குறைக்க  தென் கொரியாவும்
அமெரிக்காவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, ஆனால் இதற்கு செவி
கொடுக்காமல் அவற்றை நவீனப்படுத்தி மெருகேற்றி வருகிறது வட கொரியா.

போர் என்று வரும்போது அமெரிக்காவாலோ அல்லது தென் கொரியாவாலோ  முதல் ஒரு மணிநேரத்திற்கு வட கொரியாவை கட்டுப்படுத்த இயலாது, காரணம் தென் கொரிய
விமானப்படையின் எண்ணிக்கை மற்றும் 3000 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால்
இருக்கும் அமெரிக்காவின் குயாம் விமான தளம்.

குயாம் விமான தலத்தில் குண்டு வீசும் விமானங்களை எப்போதும் தயாராக
வைத்துள்ளது அமெரிக்கா, இது பல வருடங்களாக தயார் நிலையிலேயே உள்ளது,
காரணம் வட  கொரியா எப்போது தாக்கும் என்று யூகிப்பது மிக கடினம்.

மற்றொன்று அதிகரித்து வரும் தப்பித்தல்கள், வட கொரியாவிலிருந்து ராணுவ
அதிகாரிகள், குடும்பங்கள் என வருடம் தோறும் நூற்றுக்கணக்கில் மக்கள் தென்
கொரியாவுக்கு தப்பித்து வருகின்றனர், 2015 இல் இதன் எண்ணிக்கை
அதிகரிக்கவே இரு நாடுகளுக்குமிடையில் ஒரு மோதல் நிலை உருவானது,
இருந்தாலும் அது தடுக்கப்பட்டது. தற்போது வரை தப்பித்து வரும் வட கொரிய
மக்களின் எண்ணிக்கையை அவர்களின் உறவினர்கள் மற்றும் மற்ற மக்களின்
பாதுகாப்பு கருதி மிக ரகசியமாகவே வைத்துள்ளது தென் கொரியா

வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலால் சற்றே பீதியான தென் கொரியா
அமெரிக்காவிடம் உதவி கேட்கவே, தனது அதி நவீன ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணையான
தாட் ஏவுகணையை தென் கொரியாவில் நிறுவியது, இதனால் வட கொரியாவின் அணு
ஆயுதம் மட்டுமல்லாது மற்ற ஏவுகணைகளாலும் தென் கொரியாவையோ ஜப்பானையோ தாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாது இந்த தாட் ஏவுகணை பசுபிக் கடலில் உள்ள அமெரிக்க ராணுவ
தளங்கள், ஜப்பான், தென் கொரிய நாடுகளை சீனா மற்றும் ரஷ்யாவின்
ஏவுகணைகளிலிருந்தும் பாதுகாக்கும், இதனால் தாட் ஏவுகணையை தென் கொரியாவில்
அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது சீனாவும் ரஷ்யாவும், ஆனாலும் எதற்கும் பணியாமல் தாட் ஏவுகணைகளை நிறுவி தென் கொரியாவின் பாதுகாப்பை
உறுதி செய்தது அமெரிக்கா.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு வந்திருந்த சீன அதிபரிடம்
பேச்சுவார்த்தை நடத்திய அதிபர் டிரம்ப், வட கொரியா விவகாரத்தை பற்றி அதிகம் பேசியிருப்பதாக தெரிகிறது, மேலும் இன்னொரு அணு குண்டு சோதனை நடந்தால் அதன் விளைவு பயங்கரமாக இருக்கும் என்றும் அதனால் வட கொரியாவிடம்
எடுத்து சொல்லுமாறும் சீனாவை நிர்பந்தித்துள்ளது அமெரிக்கா.

இதனிடையே வட கொரியாவின் தென் பகுதியில் அதன் அணு ஆயுத சோதனை இடங்களில் குறிப்பிட தகுந்த மாற்றங்களை அமெரிக்கா செயற்கைகோள்கள் காட்டியுள்ளன, அதோடு வட கொரியாவின் நிறுவனரின் பிறந்தநாளில் மிகப்பெரிய ஒரு அணு ஆயுத சோதனைக்கு வட கொரியா தயாராகி வருவதும் தெரிந்துள்ளது.

அதை தடுக்கவும், மேலும் அணு ஆயுத சோதனைகளை அது மேற்கொள்ளாமலிருக்கவுமே அமெரிக்கா தனது கப்பல் படை தாக்கும் குழுவை கொரிய தீபகற்பம் நோக்கி அனுப்பியுள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகளை இப்போதும் தடுத்த நிறுத்தாவிட்டால், அது வருங்காலத்தை மிக மோசமாக்கும் என்பதில் ஐயமில்லை

ஒருவேளை வட கொரியா ஏதாவது தவறு செய்ய முனைந்தால் அமெரிக்கா வட கொரியாவின் அணு ஆயுத சோதனை நிலையங்களை தாக்க முயற்சிக்கலாம்,

வட கொரியாவின் அணு ஆயுதம் என்பது கொரிய தீபகற்பதிற்கு மட்டுமல்லாது
உலகுக்கே ஒரு அச்சுறுத்தல் தான், அதன் காட்டுமிராண்டி ஆட்சிக்கூடம்
எப்போவோ அழிக்கப்படவேண்டிய ஒன்று,

வட கொரியாவின் அணு ஆயுத முயற்சிக்கோ அதன் ஆட்சியாளர்களுக்கோ இரக்கம்
காட்டுவது என்பது முட்டாள்தனமே, அது எப்பவோ தண்டிக்கப்பட வேண்டிய
அழிக்கப்பட ஒன்று..