இஸ்ரேல் நாட்டில் நடக்கும் விமானப்படை போர் பயிற்சியில் பங்கேற்கிறது இந்திய விமானப்படை

இஸ்ரேல் விமானப்படை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை  Blue Flag என்ற பெயரில் போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது, இதில் அமெரிக்கா போலந்து கிரீஸ் போன்ற நாடுகள் முக்கிய உறுப்பு நாடுகள் ஆகும், இந்த விமானப்படை போர் பயிற்சி இஸ்ரேல் விமானப்படையின் திறனை பறைசாற்றுவதோடு, இஸ்ரேலுக்கு மற்ற நாடுகளின் ஒத்துழைப்பு  மத்திய தரைக்கடல் பகுதியில் இருப்பதை உலகுக்கு காட்டுகிறது.

இந்த போர் பயிற்சி குறிப்பாக மத்திய தரைக்கடலில் ஆதிக்கம் செலுத்த முற்படும் ரஷ்யா, சிரியா மற்றும் துருக்கி விமானப்படைகளுக்கு எதிராகவே நடத்தப்பட்டு வருகிறது, அதனால் தான் இஸ்ரேலுக்கு பக்க பலமாக அண்டை நாடான கிரீஸ் மற்றும் அமெரிக்காவும் ஆதரவாக உள்ளது.

இந்த வருடம் நடக்கவுள்ள போர் பயிற்சியில் மேலும் சில நாடுகளை சேர்க்க இஸ்ரேல் முடிவெடுத்து சில நாடுகளிடம் கலந்து கொள்ளுமாறு கேட்டுள்ளது, அதில் குறிப்பாக இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்றுள்ள இந்தியா, தனது விமானப்படையை போர் பயிற்சியில் ஈடுபடுத்த அனுமதித்துள்ளது, முதல் முறையாக இஸ்ரேலில் தனது விமானப்படையை போர் பயிற்சியில் ஈடுபடுத்தவுள்ளது இந்தியா. இந்த பயிற்சியில் இந்தியா இஸ்ரேல் தவிர்த்து அமெரிக்கா ஜெர்மனி பிரான்ஸ் கிரீஸ் போலந்து மற்றும் இத்தாலி நாடுகளின் விமானப்படைகள் பயிற்சியில் ஈடுபடவுள்ளன, அதோடு சுமார் 40 நாடுகளை சேர்ந்த விமானப்படை வீரர்கள் பார்வையாளர்களாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

சுமார் இரண்டு வாரங்கள் நடக்கும் இந்த போர் பயிற்சியில் 100 போர் விமானங்கள்  கலந்துகொண்டு பல்வேறு தாக்கும் மற்றும் பாதுகாக்கும் முறைகள் பற்றி செய்து காட்டப்படவுள்ளது.

இந்தியாவும் இஸ்ரேலும் நெருங்கிய ராணுவ உறவு வைத்துள்ள போதிலும், வெளிப்படையாக இரு நாடுகளும் போர் பயிற்சியில் ஈடுபட்டது இல்லை, அல்லாமல் இந்தியாவின் ராணுவ அதிகாரிகள் முதல் சிறப்பு படை வீரர்கள் மற்றும் உளவு துறையும் இஸ்ரேலில் தான் பயிற்சி எடுத்து வந்துள்ளது, அதோடு சில ராணுவ அதிகாரிகள் இஸ்ரேலில் தான் தங்களது கடைசி முக்கிய ராணுவ கோர்ஸை படித்துள்ளார்.

இஸ்ரேல் தான் இந்தியாவின் முக்கிய ஆயுத சப்ளையாராக உள்ளது, அதோடு நல்ல தரமுள்ள ஆயுதங்களையே இந்தியாவிற்கு தந்துள்ளது இஸ்ரேல்.

மேலும் இந்தியா பிரதமரும் முதல் முறையாக இவ்வருடம் ஜூன் அல்லது ஜுலை  மாதம் இஸ்ரேல் செல்லவுள்ளது குறிப்பிடதக்கது.