கடுமையான தொடர் பயிற்சி, விபத்துக்குள்ளான C130J விமானம்

விமானப்படையின் C 130J விமானத்தை கடும் பயிற்சிக்கு பயன்படுத்தியதால்
விபத்துக்குளாகியுள்ளது, இந்த விபத்து சீன எல்லைக்கு மிக அருகில் எல்லையிலிருந்து சுமார் 75  கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய விமான ஓடு தளத்தில் வைத்து நடந்துள்ளது, மேலும் இரவு நேரத்தில் நடந்த பயிற்சியின் போது விமானம் அருகில் இருந்த வழிகாட்டும் கம்பத்தில் மோதியதால் இது நடந்துள்ளது.

1962- போருக்கு பிறகு மூடப்பட்ட சீன எல்லைக்கு அருகே உள்ள விமான ஓடுதளங்களை புதுப்பிக்க கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது, இதுவரை சுமார் 14-க்கும் மேல் ஓடுதளங்கள் புதுப்பிக்கப்பட்டு விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓடுதளங்கள் சீனாவுக்கு எதிராக ராணுவம் போர் புரிந்தால் வீரர்களுக்கு எளிதில் உபகரணங்களை வழங்கவும், கூடுதல் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை மிக விரைவில் வழங்கவும் பெரும் உதவியாக இருக்கும், விமானப்படையின் AN 32  விமானம் தான் இதுவரை அதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது,

ஆனால் அதை விட அதிக திறனும் கூடுதல் எடையை எடுத்து செல்லும் விமானங்களை
வாங்க விமானப்படை திட்டமிட்டு கடந்த ஆட்சியில் அமெரிக்காவிடமிருந்து ஆறு
அதி நவீன C 130J விமானங்கள் வாங்கப்பட்டது, இவை கூடுதல் வீரர்கள் மட்டுமின்றி கவச வாகனங்கள் மற்றும் சிறிய பீரங்கிகளையும் எடுத்து செல்லும்.

இந்த விமானங்களை விமானப்படை அதிகம் பயன்படுத்தி வந்ததோடு மட்டுமல்லாது
ஆபத்தான பல சாகச பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தது, அதிலும் குறிப்பாக
உலகிலேயே மிக உயரமான  இடத்தில் உள்ள சிறிய ஓடுபாதையான டவுலட் பெக்
ஓல்டி-யில் ஒட்டி சென்று சாதனை படைத்தது, இந்த ஓடுபாதை கடல் மட்டத்திலிருந்து சுமார் 16,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது,

இந்த ஓடுதளம் சீனாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் கரகோரம் சாலைக்கு மிக
அருகில் உள்ளது, இந்த விமான தளத்தில் பீரங்கிகளை குறுகிய நேரத்தில் நிலை
நிறுத்தி விட்டால் அந்த சாலையை மிக எளிதில் தாக்கி, சீனா பாகிஸ்தான் தரை
வழி இணைப்பை துண்டித்து விட முடியும், போரின் போது சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இது பெரும்  பின்னடைவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

தற்போது வெளியாகியுள்ள செய்தியில் கடந்த டிசம்பர் மாதம் இரவு நேரத்தில்
சீன எல்லைக்கு அருகில் உள்ள தொயிஸ் என்ற விமான ஓடுபாதையில் பயிற்சியில்
ஈடுபட்டிருந்த C 130J விமானம் ஓடுபாதைக்கு அருகில் இருந்த வழிகாட்டும்
விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த கம்பத்தில் மோதியது, இதனால் அதன் ஒருபக்க
இறக்கை மற்றும் அதில் பொருத்தப்பட்டிருந்த ஒரு எஞ்சின் கம்பத்தில் மோதி
பலத்த சேதம் அடைந்தது,

விமானத்திலிருந்த விமானிகள் மற்றும் ஆயுதங்கள் கையாளும் வீரர் உட்பட
மூவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்த விமானம் தரை இறங்கும்
போது விபத்து ஏற்பட்டுள்ளது, ஓடுபாதையிலிருந்து விமானம் விலகியதே
விபத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொயிஸ் என்ற இந்த இடம் சியாச்சின் மற்றும் சீன எல்லைக்கு செல்லும்
வழியில் உள்ள ஒரு சிறிய ராணுவ தளம் ஆகும், இந்த இடத்தில் ஆயுதங்களையோ
வீரர்களையோ குவித்து வைக்க கூடாது என்று பரஸ்பர ஒப்பந்தம் உள்ளது, போர்
திடீரென்று வந்தால் மலைகளை கடந்து எல்லைக்கு செல்ல நீண்ட நேரம் பிடிக்கும் அது மட்டுமல்லாது கடினமான பாதை என்பதால் கன ரக ஆயுதங்களை கூட எல்லை அருகே எடுத்து செல்ல முடியாது.

ஆனால் இந்த ஓடு பாதை மூலம் விமானம் வழியாக சில நிமிடங்களிலேயே
ஆயிரக்கணக்கான வீரர்களையும் ஆயுதங்களையும் எல்லை அருகே குவிக்க முடியும்
என்பது குறிப்பிட தக்கது, அதற்கு முறையான பயிற்சியும் தேவைப்படும், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் இந்த ஓடுதளங்களில் வைத்து விமானப்படை கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருவது தெரிகிறது, அதுவும் இரவு நேரங்களில் கூட இந்த ஆபத்தான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதை இந்திய ஊடகங்கள் எவ்வாறு எடுத்துக்கொள்ளும் என்று தெரியாவிட்டாலும்,
சீனா இதை பெரிய விஷயமாகவே எடுத்துக்கொள்ளும், காரணம் சீனாவால் எல்லைக்கு
அருகே சாலை வழியாக தான் வர முடியும், அதற்கு நேரமும் ஆகும், ஆனால் இந்திய
விமானப்படையோ அவர்களின் சாலை வழியை குண்டு வீசி அழிப்பதோடு சீனாவை விட குறுகிய நேரத்தில் அதிக வீரர்களையும் எல்லையில் களமிறக்கும் என்பது
குறிப்பிடதக்கது.

கடந்த 2014-ம் ஆண்டு C 130J விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த
விமானப்படை, மிக தாழ்வாக பறக்கும் போது விபத்துக்குளானது, சிறப்புமிக்க
இந்த போர் பயிற்சியை அமெரிக்கா இஸ்ரேல் போன்ற நாடுகள் மட்டுமே செய்து
வருவது குறிப்பிடத்தக்கது, அதாவது மிக தாழ்வாக பறந்து வீரர்களையும் கவச
வாகனங்களயும் எதிரி நிலத்தில் இறக்குவதே, இதற்கு ஓடுபாதை தேவை இல்லை,

விமானப்படை C130J விமானத்தின் திறனை பார்த்து கூடுதலாக மேலும் ஆறு
விமானங்களை வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது, இவை அருணாச்சல
எல்லைக்கு அருகே உள்ள இதே போன்ற ஓடுதளங்களில் பயன்படுத்தப்படவுள்ளது.