5-வது முறையாக ஹைப்பர்சானிக் ஏவுகணையை சோதனை செய்தது சீனா

 

சீனா தொடர்ந்து 5-வது முறையாக அதிவேக ஹைப்பர்சானிக் ஏவுகணையான Wu 14 – ஐ வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது, கடந்த ஜூன் மாதம் சோதனை செய்யப்பட்ட
Wu 14- ஐ மீண்டும் இரு மாதங்களிலேயே சோதனை செய்து பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது,

அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், இந்த சோதனை சீனாவின் வுசாய் ஏவுகணை சோதனை செய்யும் தளத்திலிருந்து சோதனை செய்யப்பட்டதாகவும், சோதனை வெற்றிகரமாக இருந்ததாகவும் தெரிவித்தனர், ஆனால் சீனா இது குறித்து செய்தி எதுவும் வெளியிடவில்லை,

அமெரிக்க அதிகாரிகள் இந்த சோதனையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், கடந்த ஒரு வருடமாக இதைக் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறினர், இருப்பினும் இதன் நெகிழ் தன்மை, பறக்கும் தன்மை ஆகியவற்றை குறித்து உறுதியான தகவல்கள் இல்லை என்றும், இது போன்ற ஏவுகணைகள் மூலம் அமெரிக்க கப்பல்களின் வான் பாதுகாப்ப்பை முறியடிக்க முடியும் என்றும் கூறினார்கள்,

இந்த ஏவுகணை ஒலியை விட சுமார் 10 மடங்கு வேகத்தில் பயணிக்கக் கூடியது, அதாவது சுமார் 7000 மைல் வேகம், இதில் ஆயுதங்களை பொருத்தி அதிக வேகத்தில் குறுகிய நேரத்தில் அமெரிக்க அல்லது இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளை தாக்கி அழிக்க முடியும்.

இந்த சோதனைகள் மூலம், சீனா ஹைப்பர்சானிக் ஏவுகணை தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், ஆயுதங்களை அதிவேக ஏவுகணைகளில் பொருத்தி சோதனை செய்ய வரும் காலங்களில் முயற்சி மேற்கொள்ளும் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது,

இது போன்ற ஏவுகணைகள் மூலம் மட்டுமே, இந்தியா அல்லது அமெரிக்கா கப்பல்களை தாக்கி அழிக்க முடியும், இதன் மூலம் கப்பல் படை போர் முறையில் சீனா ஒரு புதிய அத்தியாயத்தை சீக்கிரம் ஏற்படுத்தும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது,

சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் இந்த ஹைப்பர்சானிக் ஏவுகணை தொழில் நுட்பத்தில் அதக ஆர்வமாக இருக்கும் நாடுகள், இதில் அமெரிக்கா ஏற்கனவே இது போன்ற ஏராளமான ஏவுகணைகளை பரிசோதித்து வெற்றியும் கண்டுள்ளது, ரஷ்யா தனது முதல் சோதனையை இந்த வருட தொடக்கத்தில் மேற்கொண்டது,

இந்தியாவும் ஹைப்பர்சானிக் ஏவுகணை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, ஏற்கனவே சவுரியா என்னும் ஏவுகணையை சோதனை செய்து அமெரிக்காவிற்கு அடுத்து இரண்டாவதாக இந்த தொழில் நுட்பத்தில் உள்ளது, இருப்பினும் அதன் திறன் மட்டும் குறி பார்த்து தாக்கும் அமைப்பில் உள்ள பிரச்னை காரணமாக அதை படையில் சேர்ப்பது கடினம் என்று தெரிகிறது, மேலும் பிரம்மோஸ் மற்றும் HGV போன்ற இரு திட்டங்கள் இந்தியாவிடம் கைவசம் உள்ளது, இவை வரும் 2022- க்குள் படைகளில் சேர்க்கப்பட்டு விடும் என்றும் தெரிகிறது,

இதற்கு முந்தய சோதனைகள்

09 January 2014 – வெற்றி
07 August 2014 – தோல்வி
02 December 2014 – வெற்றி
07 June 2015 – வெற்றி
18 August 2015 – வெற்றி