ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பாவில் அதி நவீன F 22 விமானங்களை களமிறக்குகிறது அமெரிக்கா

அமெரிக்க விமானப் படை நவீன 5-ம் தலை முறை போர் விமானமான F 22-ஐ ரஷ்யாவிற்கு எதிராக வட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலை நிறுத்தப் போவதாக விமானப்படை தலைமை அதிகாரி ஜேம்ஸ் லீ கூறினார், ஐரோப்பாவில் ரஷ்ய அச்சுறுத்தலை சமாளிக்க புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கடந்த ஜூன் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது,

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் மறைமுகப் போருக்கு எதிராக அமெரிக்கா சிறிய அளவில் பதிலடி கொடுத்து வருகிறது, இதில் ஏற்கனவே Theater Security Package என்னும் முறையில் ஏற்கனவே அதி நவீன போர் விமானங்களையும், குண்டுகளை வீசும் விமானங்களிலும் ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள நாடோ நாடுகளில் அமெரிக்காவும் நாடோ படைகளும் நிலை நிறுத்தி உள்ளது,

இவை தான் பல தடவை வரம்பு மீறி பறக்கும் ரஷ்ய விமானங்களை எச்சரித்து திருப்பி அனுப்பி வந்தது,

F 22 விமானம் மத்திய கிழக்கு நாடுகளிலும், கிழக்கு பசிபிக் நாடுகளிலும் ஏற்கனவே நிலை நிறுத்தப்பட்டு சண்டைக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது, ஆனால் இப்போது தான் முதல் முறையாக ஐரோப்பாவில் வர இருக்கிறது, சுமார் 12 F 22 விமானங்களும் 200-க்கும் மேற்பட்ட வீரர்களும் இதற்காக ஈடுபடுத்தப்படுவர், இவை ஒரே விமான தளத்திலிருந்து செயல்படாமல் பிரிந்து பால்டிக் நாடுகளின் பல விமான தளங்களில் நிலை நிறுத்தப்பட்டு பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்,

மத்திய கிழக்கு நாடுகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ள F 22 விமானம் ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகிறது, இதன் சிறப்பம்சம் என்னவென்றால் எதிரியின் ராடர்களில் படாமல் F 22 விமானம் பறக்கும்.