மீள்பார்வை, 2013 காஷ்மீர் நிலவரம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்ததை போல ஒரு நிகழ்வு, காங்கிரஸ் ஆட்சியிலும் நடந்தது, அதற்கு ராணுவம் பழி வாங்கியது என்றாலும், பாகிஸ்தான் தனது தீவிரவாத தாக்குதலை நிறுத்தவே இல்லை, இந்த ஆட்சியாவது பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலை நிறுத்தும் என்று நம்பியும் ஏமாற்றமே இதுவரை மிஞ்சியது. ராணுவ தளத்திற்குள் புகுந்து 15 வீரர்களை தீக்கிரையாக்கியது ஒன்று சாதாரண செயல் அல்ல, அரசியல்வாதிகள் கூறுவது போல வெறும் வார்த்தைகளால் விவரிக்க கூடியதும் அல்ல. தகுந்த பதிலடியே மட்டுமே இதற்கு தீர்வு .

2013-இல் ராணுவம் எவ்வாறு பழி வாங்கியது என்று ஒரு தடவை பார்க்கலாம். 2013 ஜனவரி மாதம் பாகிஸ்தானின் எல்லைக் காவல் படையின் சிறப்பு பிரிவில் உள்ள இருவர் எல்லை தாண்டி வந்து அசதியில் படுத்திருந்த இரு ராணுவ வீரர்களை படுகொலை செய்தனர். ஹேம்ராஜ் இந்த பெயர் அவ்வளவு எளிதில் மறக்க கூடிய பெயர் இல்லை. வீரர் ஹேம்ராஜின் தலையை வெட்டிக் கொன்றனர். சொல்ல முடியாத வார்த்தைகளால் அவர் உடல் சேதப்படுத்தப்பட்டியிருந்தது. இறுதி சடங்கின் போது அவரின் முகமோ உடலோ அவரது குடும்பத்தினருக்கு கூட காண்பிக்கப்படவில்லை.

கொதித்தெழுந்த ராணுவத்தின் ராஜபுத்திர படைப்பிரிவு எல்லை தாண்டி தாக்க தனது கமாண்டரிடம் அனுமதி கேட்டனர், அவர் அரசிடம் கேட்ட போது அனுமதி மறுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் இருவருமே ராஜபுத்ர படை பிரிவை சார்ந்தவர்களே, அவர்கள் பிரிவில் இருந்த வீரர்கள் அரசு இதற்கு பதிலடி கொடுக்காது எனில் தாங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தங்கள் கமாண்டரிடம் முறையிட்டனர். தகவல் அரசுக்கு போகவே, அங்கிருந்த ராஜபுத்திர படைப்பிரிவை வேறொரு இடத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார் அன்றய ராணுவ தளபதி ஜெனெரல் பிக்ரம் சிங்.

அடுத்த சில வாரங்களிலேயே, அந்த இடத்திற்கு நாகா ரெஜிமென்ட்-ஐ சேர்ந்த வீரர்கள் வந்தனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆர்டர், முடிந்தவரை வெளியில் தெரியாமல் வேலை செய்யவும் அவ்வளவே. அங்கு வந்த சில நாட்களியே நாகா படை தன் வேலையைக் காட்டியது. தன் கண்ணில் தென்பட்ட பல பாகிஸ்தானிய ராணுவத்தினரை சுட்டது, ஆரம்ப கட்ட தாக்குதலில் இரு பாகிஸ்தான் வீரர்களை கொன்றனர் நாகா படையினர்.

இதற்கு பதிலடியாக மீண்டும் இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் வீரர்கள், நாகா ரெஜிமென்ட் வீரர்கள் தங்கியிருந்த ஒரு கேம்ப்-ஐ தாக்கியது, இருப்பினும் அந்த தாக்குதல் தடுத்து நிறுத்தியது நாகா, பாகிஸ்தான் வீரர்கள் தப்பியோடி விட்டனர்.

அடுத்த நாள் இரவே, தங்களது கமாண்டரிடம் கூட சொல்லாமல் எல்லையில் ரோந்து சென்ற நாகா படையின் ஒரு பிரிவு இரு பாகிஸ்தான் வீரர்களைக் கண்டது. இருவரையும் மடக்கி பிடித்து இந்திய எல்லைக்குள் கொண்டுவந்து மரத்தில் கட்டி வைத்தனர். பின்பு அவர்கள் முன்னால் தீயிட்டு தங்கள் பரம்பரை நாகா நடனத்தை ஆடினர். ஒரு பாகிஸ்தானிய ராணுவ வீரனின் காலை வெட்டி எடுத்து தீயில் வைத்து சமைத்தனர். அதை அவர்கள் சாப்பிட்டதாகவும் ஒரு கதை உண்டு.

மற்றொருவனை எதுவும் செய்யாத நாகா வீரர்கள், அடுத்த நாள் காலையிலேயே இருவரையும் கட்டவிழ்த்து விட்டனர், பாகிஸ்தானியர்களும் எல்லை தாண்டி சென்று விட்டனர். ஆனால் விஷயம் பாகிஸ்தான் ராணுவத்தில் காட்டுத் தீ போல பரவியது.

அதிலும் குறிப்பாக ஒரு நாகா வீரர் இவன் கால் நன்றாக இருப்பதாகவும், அடுத்த சில நாட்களுக்கு இவன் மட்டுமே போதும் என்றதாகவும், குறுக்கிட்ட மற்றொரு நாகா வீரர் இவனை நாம் கொன்றால் நம்மையும் இந்த இடத்திலிருந்து விலக்கி விடுவார்கள், நாம் இங்கு மூன்று வருடம் பணி செய்ய வேண்டியுள்ளது, எனவே வரும் நாட்களில் பார்க்கலாம் என்றும் கூறினார் .

நாகா ரெஜிமென்ட் வீரர்கள் 2013 வருட இறுதி வரை மட்டுமே பல தடவை எல்லை தாண்டி சென்றுள்ளனர், பல பாகிஸ்தான் வீரர்களையும் தீவிரவாதிகளையும் கொன்றுள்ளனர். நாகா ரெஜிமென்ட் அந்த இடத்தை விட்டு 2015-இல் வெளிவரும் வரை எந்த பெரிய ஊடுருவலோ அல்லது தாக்குதலோ நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காலங்களில், கமாண்டரின் கட்டளைக்கு கட்டுப்படாத பல அதிகாரிகளை ராணுவம் பணி மாற்றம் செய்து வேறு வேலைகளைக் கொடுத்தது. பல அதிகாரிகள் அரசின் பல இன்னல்களுக்கு ஆளானார்கள்.

ஆனால் இன்று நிலைமை வேறு, புதிய அரசு ராணுவ அதிகாரிகளை மதிக்கிறது, வீரர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, துப்பாக்கியை கையில் எடுக்க அரசு முழு அனுமதி அளித்துள்ளது,

ஆனால் தீவிரவாதிகளின் எல்லை கடந்த தாக்குதல் தான் மிகவும் பயங்கரமாக உள்ளது, பதான்கோட் சம்பவம் நடந்தபோதும் சரி, அடுத்த ஆறே மாதங்களில் நடந்த குருதாஸ்பூர் தாக்குதலும் சரி, தற்போதைய யூரி தாக்குதலானாலும் சரி, அரசு இதுவரை வாய் வார்த்தைகளினாலேயே பதில் கொடுக்கிறதே தவிர, திருப்பி தாக்க எந்த முயற்சியும் எடுக்காதது மிகுந்த வேதனையே.