அமெரிக்காவின் SR 71 உளவு விமானத்திற்கு போட்டியாக அதி வேக உளவு விமானத்தை சீனா தயாரிக்கிறது

சீனாவில் வெளியான பல செய்திகள், சீனா புதிய Ramjet ரக எஞ்சின்களை தயார் செய்து வருவதாகவும், இதன் மூலம் விமானத்திற்கு அதிக சக்தியைக் கொடுத்து அதிக வேகத்தில் பறக்க வைக்க முயற்சி மேற்கொண்டுவருவதாக தெரிகிறது, இது அமெரிக்காவின் அதி வேக SR 71 விமானத்தின் வேகத்திற்கு இணையானதாக இருக்கும் என்றும் தெரிகிறது,

மேலும் அது, ஆளில்லா விமானத்திலேயே பொருத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிகிறது, இந்த எஞ்சின் அமெரிக்காவின் SR 71 விமானத்தில் உள்ள எஞ்சினின் வடிவமைப்பைக் கொண்டதாகவும் இருக்கும், இதற்கான எஞ்சின் தொழில் நுட்பம் சீனாவில் தயாரிக்கப்பட்டு விட்டாதாகவும் செய்திகள் தெரிவிகின்றன,

சீன விமானப்படையின் அதிகாரி ஒருவர் அளித்த தகவலின் படி, சீனாவின் சூப்பர்சானிக் விமான தயாரிப்பு திட்டத்தின் படி, இந்த விமான எஞ்சின் தயாரிக்கப் பட்டு வருவதாகவும், இதன் மூலம் சுமார் மாக் 3 வேகத்தில் அதாவது ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் விமானத்தை செலுத்த முடியும் என்றும் கூறினார், முதல் கட்டமாக ஆளில்லா விமானமும் அடுத்தபடியாக விமானியுடன் கூடிய விமானமும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்,

இதுவரை சீனா ஒரு எஞ்சினைக் கூட நம்பகத் தன்மையுடன் நிறைவு செய்தது இல்லை, இருப்பினும் அதன் அறிவிப்பு விமான துறையில் ஒரு பிரம்மிப்பாகவே இருக்கிறது,

அமெரிக்கா இந்த தொழில்நுட்பத்தை 1970-களிலேயே பயன்படுத்தி தன்னிறைவும் பெற்று விட்டது.