சீனாவிடமிருந்து வாங்கிய அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை நிறுவத் துவங்கியது பாகிஸ்தான்

சமீபத்தில் வெளியான பாகிஸ்தான் அரசு அறிக்கையில், சீனாவிடமிருந்து சுமார் 6 தொகுதி வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கியதாகவும், அதை தற்போது நிறுவி வருவதாகவும் தெரிவித்துள்ளது, 2013-இல் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் மூலம் முதல் கட்டமாக 6 தொகுதி வான் பாதுகாப்பு ஏவுகணைகளை சீனா வழங்கி வருகிறது, LY 80 எனப்படும் இந்த ஏவுகணை சீனாவின் HQ 16 மாதிரியின் ஏற்றுமதி வடிவம் ஆகும். இதன் மூல வடிவம் ரஷ்யாவின் Buk ஏவுகணை தான்.

பாகிஸ்தான் இந்த ஏவுகணைகளை அதிக அளவில் வாங்கியுள்ளது அதன் வான் பாதுகாப்பை உறுதி செய்யவும், அதோடு இந்திய விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றால் சுட்டு வீழ்த்தவும் முடியும். ரஷ்யா Buk எனப்படும் ஏவுகணைகளை சீனாவிற்கு முன்பு விற்பனை செய்திருந்தது, பின்பு அதை சீனாவிலேயே உருவாக்க தொழில் நுட்ப உதவியும் வழங்கியது, பின்னர் இந்த வான் பாதுகாப்பு ஏவுகணைகளை சீனா அதிக அளவில் உருவாக்கி தனது படையில் சேர்த்தது, மேலும் இதை மேம்படுத்தி செங்குத்தாக வீசும் குழாய்களில் பொருத்தி இதற்கு புதிய வடிவம் கொடுத்தது.

2013-இல் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் சுமார் $260 மில்லியன் தொகைக்கு சுமார் ஆறு தொகுதி LY 80 ஏவுகணைகளையும், அதோடு எட்டு அதி நவீன IBIS 150 என்ற தொலை தூரம் வரை கண்காணிக்கும் ராடர்களையும் பாகிஸ்தானுக்கு வழங்க சீனா சம்மதித்தது, அதனடிப்படையில் தற்போது அவற்றை டெலிவரி செய்து விட்டதாகவும், அதில் ஒரு சில தொகுதிகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

ஒரு தொகுதி LY 80 வான் பாதுகாப்பு ஏவுகணைப் பிரிவில் சுமார் 6 ஏவுகணை வீசும் வாகனங்கள் இருக்கும், இவை ஒவ்வொன்றிலும் சுமார் ஆறு ஏவுகணைகள் இருக்கும். இதன் ராடார் மற்றும் கட்டுப்பட்டு அமைப்பால் சுமார் 8 பறக்கும் இலக்குகளை துல்லியமாக குறி வைத்து தாக்கி அழிக்க முடியும். இதனால் சுமார் 1200 அடி முதல் 54,000 அடி உயரம் வரை பறக்கும் வான் இலக்குகளை தாக்கும், மேலும் இதன் தாக்கும் தூரம் சுமார் 40 கிலோ மீட்டர் ஆகும், ரஷ்யாவின் முன்னணி போர்க்கப்பல்கள், ராணுவம் இவை அனைத்துமே இந்த வகை ஏவுகணையைத் தான் பயன் படுத்துகின்றன. இந்திய போர்க் கப்பல்களிலும் இந்த வகை ஏவுகணைகளே அதிகம் பயன்பாட்டில் உள்ளது.

இந்த வகை ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானின் வான் பரப்பு பாதுகாக்கப்பட்டுள்ளது, பாகிஸ்தான் நாட்டுக்குள் சென்று விமான தாக்குதல் நடத்த வேண்டுமென்றால், முதலில் இந்த ஏவுகணைகளை அழிக்க வேண்டும், அல்லது அதிக விலையுள்ள தொலை தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளைத் தான் பயன்படுத்த வேண்டும், ஏவுகணைகளை பயன்படுத்தும் போது இலக்கை சரியாக தாக்கும் என்று அறுதியிட்டு கூற முடியாது,

அதோடு பாகிஸ்தான் அடுத்த ஒப்பந்தத்தில் இது போன்று மேலும் சுமார் ஒன்பது தொகுதிகள் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் வாங்க சீனாவோடு ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது, இதன் டெலிவரி வரும் 2019-க்குள் முடிந்து விடும் என்றும் சீனா கூறியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் தற்போது தான் பாரக் ஏவுகணைகளை சோதனை செய்து படையில் சேர்க்க தயாராகி வருகிறது,