ISIS தீவிரவாதிகளுக்கு அணு ஆயுத பொருட்களை விற்பனை செய்ய முன்ற நபர் மால்டோவா நாட்டில் கைது

மால்டோவா நாட்டு காவல் துறையும் அமெரிக்காவின் FBI உளவு அதிகாரிகளும் இணைந்து நடத்திய வேட்டையில் ISIS தீவிரவாதிகளுக்கு அணு ஆயுத உபகரணங்களை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த கடத்தல்காரர்களை கைது செய்தனர், அவர்களிடமிருந்து அதிக அளவில் சீசியம் மற்றும் யுரேனிய தாதுக்கள் இருந்ததது கண்டுபிடிக்கப்பட்டது, இவை ரஷ்ய நாட்டு அணு உலைகளிலிருந்து திருடப்பட்டது ஆகும்,

பெப்ரவரி மாதத்தில் நடந்த இந்த சம்பவத்தை தற்போது தான் மால்டோவா அரசும் அமெரிக்காவும் Associated Press செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர், இந்த கடத்தல்க்காரர்கள் கதிரியக்க பொருட்களை தீவிரவாத குழுக்களுக்கு விற்று பணம் சம்பாதிக்க நினைத்ததாகவும், இவர்கள் இதை பல வருடங்களாக விற்பனை செய்ய முயற்சித்து வருவதாகவும், தற்போது அமெரிக்க மற்றும் மால்டோவ அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளதாகவும் AP நிறுவனம் தெரிவித்துள்ளது,

2011-ம் வருடம் நடந்த ஒரு சம்பவத்தில் கடத்தல்காரன் ஒருவன் அணு ஆயுதம் தயாரிக்கும் மூலப் பொருளான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சுடான் நாட்டு தீவிரவாத குழு ஒன்றுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்லும் போது அமெரிக்க ராணுவம் அதிரடியாக தாக்கி அவர்களை கைது செய்தது, அதனுடன் ஒப்பிடும் போது இதை வெகு சீக்கிரமாகவே கண்டு பிடித்து விட்டதாக அதிகாரிகள் கூறியதாக AP கூறியது,

இருப்பினும் கருப்பு சந்தையில் தற்போதும் குறிப்பிட்ட ஒரு அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் விற்பனைக்கு தயாராக இருப்பதாகவும், அதை தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர், இவை அனைத்துமே ரஷ்யா நாட்டு அணு உலைகளிலிருந்து திருடப்பட்டவை ஆகும், இது அருகிலுள்ள உக்ரைன் நாடு வழியாக மால்டோவா நாட்டின் சில பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்,

இந்த கைது முயற்சியின் போது காரில் சென்ற ஒருவனும், வீட்டில் ஒளிந்திருந்த ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து சீசியம் மற்றும் யுரேனியம் கைப்பற்றப்பட்டதாகவும், மேலும் இருவர் தப்பி விட்டதாகவும், அவர்களிடமும் குறிப்பிட்ட அளவு கதிரியக்கப் பொருட்கள் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்றும் கூறினார்கள்.