அந்தமான் கடற்பகுதியில் இந்தியா தாய்லாந்து கூட்டு பயிற்சி

இந்தியாவின் கோர்முக் போர் கப்பலும், டோர்னியர் கண்காணிப்பு விமானமும் இணைந்து அந்தமான் கடற் பகுதியில் தாய்லாந்து நாட்டு கப்பல் படையுடன் கூட்டு ரோந்து செல்லவுள்ளன. 22-வது முறையாக நடக்கும் இந்த கூட்டு ரோந்து பயிற்சி 27-ம் தேதி நிறைவு பெறவுள்ளது.

இந்திய தாய்லாந்து கடல் சார் உறவு தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது, அதிலும் குறிப்பாக இரு நாட்டு கப்பல்களும் அடுத்தவர் துறைமுகங்களுக்கு செல்வது, மற்ற நேச  நாடுகளுடன் சேர்ந்து கப்பல் படை பயிற்சியில் ஈடுபடுவது, மற்றும் வீரர்களுக்கு பயிற்சியளிப்பது தொடர்பாக இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்த  நல்ல உறவை பறை சாற்றும் பொருட்டு இரு நாடுகளும் சேர்ந்து சர்வதேச கடல் எல்லையில் ரோந்து செல்லவுள்ளன, இது 2005 முதல் வருடத்திற்கு இரு முறை நடந்து வருகிறது, இதன் முக்கிய குறிக்கோள், இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதியான சுமூகமான கடல் வாணிபம் நடை பெற வேண்டும் என்பதே.

மேலும் இந்த கூட்டு ரோந்து மூலம், இரு நாட்டு கப்பல் படைகளின் இயங்கும் முறை பற்றியும், பேரிடர் காலங்களில் உதவி மற்றும் மீட்பு பணிகளிலும் சேர்ந்து செயல்படும் முறை குறித்தும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்

இந்தியா போலவே தாய்லாந்து கப்பல் படையும் ஒரு போர்கப்பலையும் ஒரு கண்காணிப்பு விமானத்தையும் இந்த பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளது. இந்தியாவும் தாய்லாந்தும் தொடர்ந்து நல்ல உறவில் உள்ளன, தாய்லாந்தும் சீன எதிர்ப்பு நிலைலையே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது