புதிய C 130J விமானங்களை பானகாவிலுள்ள அர்ஜன்சிங் விமான தளத்தில் நிறுத்த விமானப்படை திட்டம்

இந்திய விமானப்படை பானகாவிலுள்ள அர்ஜன் சிங் விமான தளத்தை நவீனப்படுத்தி வருவதாகவும், அடுத்த வருடம் முதல் அமெரிக்காவிலிருந்து வாங்கப்படும் புதிய C 130J விமானங்கள் இந்த தளத்திலிருந்து தங்கள் பணியை துவங்கும் என்றும் கிழக்கு பிராந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கூடுதலாக வாங்கப்படவுள்ள C 130J விமானத்திற்கான ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகி விட்டதாகவும், அவை அனைத்தையும் அடுத்த ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவிற்கு வழங்க விமான தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்டின் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த புதிய சரக்கு விமான பிரிவிற்கு 87 வது ஸ்குவார்டன் என்று பெயரிடப்பட்டுள்ளது, கிழக்கு விமான கட்டுப்பாட்டின் கீழ் வரும் இந்த ராணுவ தளம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணிகளிலும் ஈடுபடுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தளம் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள சிறப்பு ராணுவ தாக்கும் பிரிவான Mountain Strike Corps-க்கு பெருமளவில் உதவி புரியும் என்றும், குறிப்பாக சீனாவிற்கு எதிராக அது செயல்படும் எனபது கூடுதல் சிறப்பு.

அமெரிக்காவின் லாக்ஹீட் நிறுவன அதிகாரிகளும் பொறியாளர்களும் ஏற்கனவே பானகா வந்து அங்கு பலதரப்பட்ட வேலைகளை செய்து வருவதாகவும், குறிப்பாக விமான சோதனை அமைப்பு, விமானம் தங்கும் அமைப்பு (Hanger), உதிரி பாகங்கள் வைக்கும் அமைப்பு ஆகியவற்றை கட்டி வருவதாகவும், இந்த பணி அடுத்த மாதத்திற்குள் நிறைவு பெற்று விடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்,