சிரிய ராணுவத்துக்கு அனுப்பிய ஆயுதங்களை கைப்பற்றியது ISIS

ஈரான் அரசு சிரிய உள்நாட்டுப் போரில் கலந்து கொண்டு சிரிய ராணுவத்திற்கு ஆயுதங்களையும் வீரர்களையும் வழங்கி வருகிறது, சிரியாவின் தெற்கே கனாசிர் பகுதியில் ISIS தீவிரவாதிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த சிரிய அரசுப் படைகளுக்கு ஈரான் அரசு நவீன ஆயுதங்களை டன் கணக்கில் அனுப்பியது, ஆனால் அவை அனைத்தையும் ISIS தீவிரவாதிகள் கைப்பற்றிக் கொண்டனர்.

கனாசிர் பகுதி, சிரியாவின் அலெப்போ நகரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது, இந்த பகுதியில் ISIS தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது, ISIS  தீவிரவாதிகளை சிரிய அரசப் படைகளும் சிரிய போராளிக் குழுக்களும் இரண்டு பகுதியிலிருந்து தாக்கி வருகிறனர். இருந்தாலும் முக்கிய பகுதிகள் ISIS வசம் உள்ளதால் மற்ற படைகள் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருகின்றன.

ஈரான் அரசும் சிரிய படைகளுக்கு உதவ அங்கு உள்ள ஒரே ஒரு நெடுஞ்சாலை வழியாக டன் கணக்கில் ஆயுதங்களை அனுப்பியது, இதில் துப்பாக்கி குண்டுகள், சிறிய ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளும் அடங்கும், இதை வழியில் மடக்கிய ISIS தீவிரவாதிகள்,  மொத்த ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டனர்.

இதனால் சிரிய அரசுப் படைகள் இன்னும் சில நாட்களில் தேவையான குண்டுகள் இன்றி ISIS கைகளில் உயிருடன் மாட்டும் நிலை ஏற்பட்டுள்ளது, ஏற்கனவே சிரிய படைகள் இது போல பல இடங்களில் மாட்டி ISIS தீவிரவாதிகளால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே,  கிடைத்த புது ஆயுதங்களைக் கொண்டு ISIS தீவிரவாதிகள் போராளிகள் குழு மீது பயங்கர தாக்குதல் நடத்தினார், இதை அறிந்த அமெரிக்க கப்பல் படை, போர் விமானங்களை அனுப்பி போராளிகள் குழுவுக்கு பாதுகாப்பு வழங்கியது.

இருப்பினும் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் கனாசிர் பகுதியை ISIS மொத்தமாக கைப்பற்றி விடும் என்று ராணுவ பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனார்.