VIP-களுக்கான ஹெலிகாப்டர்களில் மின்னணு போர் கருவிகளை பொருத்துகிறது இந்தியா

இந்தியாவின் முக்கிய தலைவர்களான பிரதமர் மற்றும் கேபினெட் அமைச்சர்கள் பயணிக்க விமானப் படையின் மேம்படுத்தப்பட்ட Mi 17 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதன் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க ரஷ்யாவின் கிரட் நிறுவனம் தயாரித்த மேம்படுத்தப்பட்ட மின்னணு பாதுகாப்பு கருவிகளை பொருத்த ஆயத்தமாகி வருகிறது இந்திய விமானப் படை.

பிரசிடென்ட் S என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மின்னணு பாதுகாப்பு கருவி, ஹெலிகாப்டரின் வெளிப்குதியில் பல்வேறு இடங்களில் பொருத்தப்படும், இந்த அமைப்பு இன்பரரெட் கதிர்கள் மூலம் வழிநடத்தப்படும், எளிதில் கைகளால் எடுத்து செல்லப்படும் MANPAD ரக ஏவுகணைகளை குழப்பி விடும்.

இதனால் இந்த நவீன கருவி பொருத்தபட்டுள்ள ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்துவது மிகக் கடினம், இந்த தொழில் நுட்பத்தை, இந்தியா அல்ஜீரியா எகிப்து மற்றும் பெலாரஸ் நாட்டிற்கும் கொடுத்துள்ளதாக இதை தயாரித்த கிரட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்திய விமானப் படையில் சுமார் 200-க்கும் அதிகமான Mi 17 பல்நோக்கு சரக்கு விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன, அவற்றில் சுமார் 12 முக்கிய அதிகாரிகளின் பயணங்களுக்கு ஈடுபடுத்தப்படுகிறது, இவற்றிலே நவீன பாதுகாப்பு சாதனங்கள் உள்ளன.

இந்திய விமானப் படை 2015 -இல் விடுத்த ஒரு டெண்டரில், விமானப் படையில் உள்ள அனைத்து Mi 17 ஹெலிகாப்டர்களிலும் இத்தகைய பாதுகாப்பை சேர்க்க கேட்டிருந்தது, ஆனாலும் அதன் தற்போதைய நிலை குறித்து தகவல்கள் ஏதும் இல்லை.

இந்த பிரசிடென்ட் S மின்னணு பாதுகாப்பு கருவியை, ரஷ்ய தயாரிப்பு ஹெலிகாப்டர்கள் எல்லாவற்றிலேயும் சேர்க்க முடியும், மின்னணு பாதுகாப்பு கருவிகள் வாங்கும் போது இந்தியா எப்போதுமே சுவீடன் அல்லது இஸ்ரேல் நாட்டின் தயாரிப்பையே பெரிதும் விரும்பும், இந்தியாவின் துருவ் ஹெலிகாப்டர் சுவீடனின் மின்னணு பாதுகாப்பு கருவியையே பயன்படுத்துகிறது