இத்தாலியின் பரேட்டா நிறுவனத்துடன் கை கோர்க்கிறது கல்யாணி குழுமம்

இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனமான கல்யாணி, உலகின் தலை சிறந்த துப்பாக்கிகள் மற்றும் குறி பார்த்து சுடும் துப்பாக்கி தயாரிக்கும் இத்தாலி நாட்டின் நிறுவனமான பரேட்டாவுடன் சேர்ந்து இந்தியாவில் துப்பாக்கி தயாரிக்கவும், அதை இந்திய வீரர்களுக்கு கொடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கல்யாணி நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இத்தாலியின் பரேட்டா நிறுவனம் கூறுகையில் துப்பாக்கி தயாரிக்கும் அடிப்படை தொழில்நுட்பத்தை இந்திய நிறுவனங்களோடு பகிர்ந்துகொள்ளவும், இந்தியாவிலேயே அவற்றை தயாரிக்கவும் ஆர்வமாக இருப்பதாக கூறியது.

இந்திய ராணுவம் முதல் உலகின் பல்வேறு ராணுவங்கள் பரேட்டாவின் துப்பாக்கிகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றன, இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு படை பிரதமரின் சிறப்பு பாதுகாவல் குழு போன்றவையும் பரேட்டா நிறுவனம் தயாரித்த துப்பாக்கிகளை தான் அதிகம் பயன்படுத்துகிறது.

பரேட்டாவின் அதிகாரியான பாப்ரிகா கூறும்போது, பரேட்டா ஏற்கனவே பல நாடுகளுடன் ஒப்பந்தம் போட்டு துப்பாக்கிகளை அந்தந்த நாடுகளிலேயே தயாரித்து வருவதாகவும், இந்தியாவிலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே தயாரிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.

பரேட்டாவின் முக்கிய உற்பத்தியாக அசால்ட் ரைபிள், ஸ்னைப்பர் ரைபிள் மற்றும் சிறிய கைத்துப்பாக்கிகள் விளங்குகின்றன.