சீனா தனது அதிநவீன போர்க்கப்பலான Type 52D-ஐ படையில் சேர்த்தது

 

சீனா Type 52 D என்னும் பெயரில் அதி நவீன போர்கப்பல்களைக் கட்டி தனது கப்பல் படையில் சேர்த்து வருகிறது, இந்த வகையில் அது ஏற்கனவே ஒரு கப்பலை படையில் சேர்த்துக் கொண்டு விட்டது, மேலும் இதே வகையில் மூன்று கப்பல்கள் தற்போது சோதனை ஓட்டத்திலும் இரு கப்பல்கள் கட்டப்பட்டும் வருகின்றன.

இந்த வகை அதி நவீன போர்க் கப்பல்கள் இந்தியாவின் நவீன போர்க் கப்பலான கொல்கத்தா வகை போர்கப்பளுக்கு சமமான பலத்தைக் கொண்டுள்ளவை, இந்தியா கொல்கத்தா வகையில் மூன்று கப்பல்களை கட்டி ஒன்றை படையில் சேர்த்துள்ள நேரத்தில், சீனா ஆறு கப்பல்களை கட்டி இரண்டை படையில் சேர்த்துக் கொண்டு விட்டது.

இந்த வகை கப்பல்கள் மூலம் எதிரி கப்பல்களையும் நிலத்தில் உள்ள கட்டடங்களையும் சரியாக குறிபார்த்து தாக்கி அழிக்கவும், எதிர் நாட்டு போர் விமானங்கள் , ஏவுகணைகள் நீர்மூழ்கிகள் இந்த கப்பலை தாக்காதவாறு எதிர்த்து தாக்கும் ஏவுகணைகளும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் செயற்கைக்கோள் படங்களை ஆராய்ந்து பார்த்ததில், சீனா இதே வகையில் மேலும் மூன்று கப்பல்களை கட்டும் ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது, இதன் மூலம் சுமார் 10 புதிய அதி நவீன ரக போர் கப்பல்களை குறுகிய காலத்தில் கட்ட சீனா முடிவெடுத்துள்ளது தெரிகிறது.