அதம்யா ஆளில்லா உளவு நீர்மூழ்கி

இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான L&T  கோவாவில் நடந்த ஆயுத கண்காட்சியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதம்யா என்ற பெயர் கொண்ட ஆளில்லா உளவு நீர் மூழ்கி கப்பலை பார்வைக்கு வைத்திருந்தது. இது போன்ற உளவு நீர்மூழ்கிகளை வாங்க அரசிடம் நீண்ட நாட்களாக கப்பல் படை கோரி வருகிறது. அந்த காரணத்திற்காகவே L&T இதை உருவாக்கி தொடர்ந்து பல ஆண்டுகளாக காட்சிக்கு வைத்து வருகிறது.

இந்த அதம்யா நீர் மூழ்கி கப்பல்களின் டோர்பெடோ செலுத்தும் குழாய் வழியே வெளியே அனுப்பி உளவு பார்க்குமாறு அதன் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக நீர்மூழ்கி கப்பல்களில் உள்ள சாதாரண 533mm விட்டம் கொண்ட டோர்பெடோ குழாய் மூலம் இதை வெளியே செலுத்தலாம்.

இதன் முக்கிய பணிகளாவன, கடல் படுகையை ஆராய்ச்சி செய்வது, கடலில் இருக்கும் கண்ணி வெடிகளை கண்டறிவது, எதிரி கடற் பகுதிக்குள் நுழைந்து உளவு வேலைகள் பார்ப்பது, துறைமுக பாதுகாப்பு, எதிரி சிறப்பு படைகளை கண்காணிப்பது, மற்றும் எதிரி நீர்மூழ்கிகளை கண்டறிந்து அழிப்பது போன்றவை ஆகும்.

சுமார் ஆறு மீட்டர் நீளம் கொண்ட இந்த அதம்யா சுமார் 4 நாட்ஸ் வேகத்தில் கடலில் பயணிக்கும், சுமார் 1500 அடி ஆழம் வரை கடலுக்குள் செல்லும், சுமார் எட்டு மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் அதி நவீன லித்தியம் பாலிமர் மின்கலன் இதற்கு சக்தி கொடுக்கிறது.

இது சேகரிக்கும் தகவல்கள் அதே நேரத்தில் நேரடியாக இதை செலுத்திய அல்லது அருகில் உள்ள துணைக் கப்பலுக்கு சென்று விடும், அதற்காக நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் இதில் உள்ளது.

உலகின் பல நாடுகளில் தங்கள் போர் கப்பல்களில் இது போன்ற நவீன ஆளில்லா உளவு நீர்மூழ்கிகளை கொண்டு செல்கின்றன, இதன் மூலம் அதன் சூழ்நிலை எச்சரிக்கை மேபடுத்தப்படுகிறது. இந்திய கப்பல் படைக்கு இது போன்ற நீர்மூழ்கிகளை  வாங்க இது வரை அரசு அனுமதி அளிக்காதது அதிருப்திக்குரியது.

இதன் சிறப்பம்சங்கள் கீழே உள்ள வீடியோவில்