ஜப்பனுக்கு எதிராக பிரச்சனைக்குரிய தீவுகளில் ஏவுகணைகளை நிறுத்த ரஷ்யா முடிவு

ரஷ்ய கப்பல் படை பிரச்சனைக்குரிய குறில் தீவுகளில் அதி நவீன கப்பல்களை அழிக்கும்  ஏவுகணைகளை நிலை நிறுத்த முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த தீவுகளில் ஏற்கனவே பால் மற்றும் பாஸ்டியன் ஏவுகணைகளும், ஆளில்லா உளவு விமானங்களும் செயல்பாட்டில் உள்ளதாகவும், இருந்தாலும் அந்த தீவின் பாதுகாப்பை பலப்படுத்த மேலும் அதிகமான ஏவுகணைகளை நிலை நிறுத்தப் போவதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கி கூறியுள்ளார்.

இந்த தீவில் உள்ள ராணுவ நிலைகளை மேம்படுத்த ரஷ்யா அதிக அளவு முதலீடு செய்து வருகிறது, இதன் மூலம் ஜப்பானை மிக எளிதில் தாக்கி அழிக்க முடியும். சீனாவுடன் போர் வரும் சமயத்தில் ரஷ்யாவும் சீனாவிற்கு ஆதரவாக ஜப்பானுக்கு எதிராக செயல்படும் வாய்ப்புகள் அதிகம்.

இந்த பிரச்சனைக்குரிய குறில் தீவுகள், ஜப்பானுக்குரியது என்று ஜப்பான் கூறி வருகிறது, இரண்டாம் உலகப் போரில் கைப்பற்றப்பட்ட இந்த தீவு ரஷ்யாவிற்கு தான் சொந்தம் என்று ரஷ்யா கூறி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்குமிடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கூட இதுவரை கையெழுத்தாகாதது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் உலகப் போர் முடிந்ததிலிலிருந்து இதுவரை இப்படியே இருந்து வருகிறது.

ஆனால், பிரச்சனையை அதிகப்படுத்தும் விதமாக ரஷ்யா இந்த தீவில் தொடர்ந்து ஏவுகணைகளையும் போர் வீரர்களையும் தொடர்ந்து குவித்து வருவது, அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த புதிய திட்டத்திற்கு ஜப்பான் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் அடுத்த மாதம் ரஷ்ய கப்பல் படையின் போர்க்கப்பல்கள் மற்றும் அதிகாரிகள் இந்த தீவிற்கு வருகை தரவுள்ளனர், தீவை ஆய்வு செய்யும் அவர்கள் இதை கப்பல் படை தளமாக மாறுதல் செய்ய முடியுமா என்றும் ஆராய உள்ளனர்.

மேலும் அடுத்த 2017-க்குள் சுமார் 350 நவீன கட்டடங்களை கட்ட ரஷ்யா முடிவு செய்துள்ளது, அதில் தனது கடற்படை வீரர்களை குடியமர்த்தவும் முடிவு செய்துள்ளது.

சீனாவிற்கு எதிராக பெரும் யுத்தத்திற்கு ஆயத்தமாகி வரும் பசுபிக் நாடுகளை குறி வைக்கும் விதமாக ரஷ்யா தொடர்ந்து தனது பலத்தை இவ்வாறு காட்டி வருவது குறிப்பிடத் தக்கது.  சீனாவிற்கு எதிராக ஜப்பான் போரிட்டால், சீனாவிற்கு ஆதரவாக ரஷ்யா ஜப்பானை தாக்கும் என்றும் ராணுவ பார்வையாளர்கள் தெரிவிக்கிற்றனர்.

பிரச்சனைக்குரிய இந்த தீவில் சுமார் 19,000 ரஷ்ய மக்கள் வாழ்கின்றனர்.