ஆயுதங்கள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள் வாங்க முன்னுரிமை, பாதுகாப்பு அமைச்சர்

ராணுவத்திற்கு தேவையான குண்டுகள், கப்பல் படைக்கு தேவையான நீர்மூழ்கிகள் மற்றும் விமானப் படைக்கு தேவையான போர் விமானங்கள் வாங்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் தெரிவித்தார், புதிய ஆயுத கொள்முதல் ஒப்பந்தத்திற்கு இறுதி ஒப்புதல் வழங்கிய பின்பு இதை அவர் கூறினார், DPP எனப்படும் புதிய ஆயுத கொள்முதல் ஒப்பந்தம் இந்த மாதம் 28-ம் தேதி நிறைவேற்றப்படவுள்ளது.

இதன் மூலம் ஆயுதம் வாங்கும் நடை முறைகளில் உள்ள கடினமான முறைகள் நீக்கப்பட்டு, போர் சமயங்களில் எப்படி துரிதமாக ஆயுதம் வாங்க நடை முறைகள் உள்ளதோ அது போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ராணுவத்திற்கு போதிய அளவு குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் விதமாக புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டு அவை தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் என்றும், ஆயுதங்களின் தரத்தையும், அதை பாதுகாத்து நீண்ட நாள் வரை உபயோகப்படுத்தும் விதமாக சேமிப்பு கிடங்குகளும் நவீனப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கப்பல் படையின் நீர்மூழ்கிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அவை மிக விரைவில் சரி செய்யப்பட்டுவிடும் என்றும், புதிய ஒப்பந்தங்களின் மூலம் மேலும் இரண்டு புதிய ரக நீர்மூழ்கிகள் சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் அடுத்த தலைமுறை நீர்மூழ்கி மற்றும், அணு உலையால் இயங்கும் நவீன நீர்மூழ்கி கட்டும் திட்டத்தை அரசு முன்னெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விமானப்படையின் போர் விமானங்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது, அதை நிவர்த்தி செய்ய தனியாரின் உதவியோடு புதிய ஒரு விமான தயாரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்றும், வருடத்திற்கு 16 விமானங்களை அது உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார், சமீபத்தில் தேஜாஸ் விமான தயாரிப்பை இரட்டிப்பாக்கும் வண்ணம் இன்னொரு தயாரிப்பு நிலையத்தை அமைக்க அரசு நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 2019- முதல் 16 தேஜாஸ் விமானங்களை தயாரிக்க முடியும்