ரஷ்யாவிடமிருந்து வாங்கிய முதல் இரண்டு கிலோ ரக நீர்மூழ்கி கப்பல்களை படையில் சேர்த்தது வியட்னாம்

வியட்னாம் அரசு தனது கப்பல் படைக்கு ரஷ்ய நாட்டிடமிருந்து ஆறு அதி நவீன டீசலால் இயங்கும் கிலோ ரக நீர்மூழ்கி கப்பல்களை வாங்கியது, இந்த கப்பல்களிலிருந்து அதி நவீன ஏவுகணைகளை ஏவ சிறப்பாக மாற்றி வடிவமைக்கப்பட்டது,

பின்பு இது கட்டி முடிக்கப்பட்டு பல்வேறு சோதனைகளுக்கு பின்பு வியட்னாம் அரசுக்கு வழங்கப்பட்டது, இருப்பினும் படையில் சேர்க்க அது வியட்னாம் கப்பல் படையின் சோதனையிலும் வெற்றி பெற வேண்டும். இதில் முதல் இரண்டு கப்பகளும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு வியட்னாம் கப்பல் படையில் முறையாக சேர்க்கப்பட்டது.

மூன்று மாற்றும் நான்காவது கப்பல்கள் தற்போது கட்டி முடிக்கப்பட்டு சோதனை ஓட்டத்தில் உள்ளன, கடைசி 5வது ஆறாவது கப்பல்கள் கட்டி முடிக்கும் தருவாயில் உள்ளது.