சிரியாவிலிருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவிப்பு

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் அந்நாட்டு அதிபர் ஆசாதிற்கு  ஆதரவாக ரஷ்யா தனது கப்பல் படையையும் விமானப் படையையும் களமிறக்கியது, இதனால் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் துறைமுக நகரமான லடாக்கியா பகுதிகளின் முன்னேறி வந்த சிரிய போராளிகள் குழு தடுக்கப்பட்டது.

சிரியாவில் கொடுங்கோல் ஆட்சியை பல வருடங்களாக ஆசாத்தின் குடும்பம் நடத்தி வருகிறது, அதை எதிர்த்து மக்களாட்சி வேண்டும் என்று சிரிய ராணுவத்தின் ஒரு படை பிரிவும், மக்களும் கடந்த 2010-இல் போராடத் துவங்கினர். அவர்களுக்கு எதிராக அடக்கு முறையைக் கையாண்ட ஆசாத், விமானத் தாக்குதலும், வேதி மற்றும் உயிரி ஆயுதங்களாலும் தாக்குதல் நடத்தியது.

இதனால் அவர்களுக்கு ஆதரவாக மேற்குலகமும், மற்ற அரபு நாடுகளும் முன்வந்தன. இதனால் சண்டை நீடித்து வந்தது, ஆசாத்திற்கு ஆதரவாக ரஷ்யாவும் ஈரானும் செயல்பட்டு வந்தன, போராளிகளின் கை ஒங்கியதை அடுத்து ரஷ்யா போரில் குதித்தது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் போரில் உக்கிரமாக செயல்பட்ட ரஷ்யா போராளிகளின் படையை பல இடங்களில் வெற்றி கொண்டது

இதை அடுத்து கடந்த மாதம் 27-ம் தேதி போர் நிறுத்தத்தை அறிவிப்பதாக ரஷ்ய, சிரிய படைகளும், போராளிகள் குழுவும் அறிவித்தனர். மேலும் ஜெனீவாவில் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடை பெற்றது. இதனிடையே ரஷ்ய அதிபர் புதின் திடீரென படைகளை வாபஸ் பெறுவதாக  அறிவித்துள்ளார்.

அவர் பேசும் போது, ரஷ்ய படைகள் சிரியாவை விட்டு வெளியேறினால், சிரியாவில் அமைதி வர வாய்ப்பு அதிகமாகும் என்றும் இது ஒரு ஜனநாயக ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று கூறினார்,

அதே வேளையில், அரபு நாடுகள் போராளிக் குழுக்களுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அனுப்ப தொடங்கியதாகவும், இதன் மூலம் சிரியாவில் பறக்கும் போர் விமானங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே போர் நிறுத்தம் அமலில் இருந்த போது, குண்டு வீச சென்ற ஒரு சிரிய போர் விமானத்தை போராளிகள் குழு சுட்டு வீழ்த்தியுள்ளது.  இது போராளிகள் கையில் நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகள் கிடைத்ததை சுட்டிக்காட்டுகிறது.

இதனிடையே, துருக்கிய எல்லைப் பகுதியில், துருக்கிய ராணுவம் படைகளை குவித்து வருவதாகவும், சீக்கிரமே அவை சிரியாவிற்குள் புகுந்து விடும் என்றும் புதின்  கூறினார்.