இந்தியா இந்தோனேசிய ராணுவக் கூட்டுப் பயிற்சி

இந்திய ராணுவ சிறப்புப் படையினரும், இந்தோனேசிய ராணுவமும் இணைந்து கருடா சக்தி என்ற பெயரில் வருடம் தோறும் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றன, இந்த வருடம் இந்த பயிற்சியை இந்தோனேசியாவில் மார்ச் 10 முதல் ஆரம்பித்து 23 வரை நடத்த திட்டமிடப்பட்டு, தற்போது இரு நாட்டுப் படையினரும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய தரப்பில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர், இந்தோனேசியாவும் அதே அளவு வீரர்களையும் அதோடு ஹெலிகாப்டர் மற்றும் கவச வாகனங்களையும் ஈடுபடுத்தியுள்ளது.

இந்த பயிற்சியில் ஆயுதங்களை எவ்வாறு கையாள்வது என்றும், நேரடி துப்பாக்கி சண்டை போடுவது பற்றியும் விரிவாக இருதரப்பும் கற்றுக் கொள்ளுவர், இரு நாட்டு வீரர்களும் வெவ்வேறு ஆயுதங்களை எப்படி பயன்படுத்துவது என்று கற்ற பின்னரே நேரடி துப்பாக்கி சண்டை பயிற்சியை  மேற்கொள்ளுவார்கள். தற்போது இரு படைகளும் மிக அருகில் உள்ள இலக்கை எவ்வாறு தாக்குவது என்ற பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமே இரு நாட்டு வீரர்களிடமும் நல்லெண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே என்று ஒரு இந்திய அதிகாரி கூறினார், இதன் மூலம் சர்வதேச ஐ.நா பாதுகாப்பு குழுவில் பணியாற்றும் போது இரு நாட்டு வீரர்களும் இணைந்து செயல்பட முடியும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இரு நாட்டு வீரர்களும் தங்களின் சிறப்பு ஆற்றலை வெளிப்படுத்தி அதை மற்றவருக்கும் கற்றுக் கொடுப்பார்கள் எனவும்  அவர் தெரிவித்தார்.

இருந்தாலும், சீனாவுக்கு எதிரான நாடுகள் ஒன்று சேர்ந்து தங்களுக்குள்ளான ராணுவ உறவை மேம்படுத்தி வருகின்றன, இந்தியாவும் இந்தோனேசியாவும் பல வழிகளில் சீனாவில் அத்துமீறலை கண்டித்து வருவதோடு, தங்களுக்குள்ளான உறவை மேலும் வலுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது