2000 கோடி செலவில் நீர்மூழ்கி உதவிக் கலன்களை வாங்குகிறது இந்தியா

இந்திய கப்பல் படைக்கு சுமார் 2000 கோடி செலவில் இரண்டு நீர்மூழ்கி உதவிக்கலன்களை இங்கிலாந்திடமிருந்து வாங்க அனுமதி அளித்துள்ளது மத்திய கேபினெட் குழு. இந்த நீர்மூழ்கி உதவிக் கலன்கள், சிறிய நீர்மூழ்கி போலவே செயல்படும், ஆனால் ஆபத்துக் காலத்தில் நீர்மூழ்கிகளிலிலிருந்து வீரர்களைக் காக்க பயன்படும்.

இந்த நீர்மூழ்கி உதவிக் கலன்கள் இங்கிலாந்து நாட்டின், ஜேம்ஸ் பிஷெர் நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும், இந்த நிறுவனம் தான் உலகின் முன்னணி கப்பல் படைகளுக்கு இதே கலன்களை வழங்குகிறது. இந்த கலன்களை வாங்க இந்திய கப்பல் படை சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கலன்கள் பொதுவாக நீர்மூழ்கி கப்பல்கள் விபத்தில் சிக்கும் போது, அதிலுள்ள வீரர்களை காப்பாற்ற பயன்படும், நீர்மூழ்கியில் ஆபத்து நேரும் போது உயர் அழுத்த உடைகளை அணிவதன் மூலம் நீர்மூழ்கியிலிருந்தும் நீரிலிருந்தும் தப்பிக்கலாம், ஆனால் இது ஒரு குறிப்பிட ஆழம் வரை மட்டுமே, அதற்கு கீழ் சென்றால் நீர்மூழ்கி உதவிக் கப்பல்கள் பயன்படுத்தப்படும், இவற்றின் பயன்படும் ஒரு குறிப்பிட்ட ஆழம் வரை மட்டுமே, மேலும் இந்த கப்பல்கள் குறிப்பிட்ட இலக்கை அடைய கடல் வழியாகத் தான் வர வேண்டும்.

ஆனால் நீர்மூழ்கி உதவிக்கென்றே  வடிவமைக்கப்பட்ட இந்த கலன்கள் சுமார் 1800 அடி ஆழம் வரை சென்று வீரர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டு மேலே வரும், மேலும் இதை எளிதில் விமானத்தில் வைத்து எடுத்து செல்லலாம். மேலும் தொடர்ந்து பல நாட்கள் கடலுக்கடியில் இருந்து நீர்மூழ்கி சார்ந்த மற்ற பணிகளுக்கும் உதவி புரியும்.

இதை வாங்குவதற்கான ஒப்பந்த கையெழுத்து இன்னும் சில நாட்களின் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.