ஒரு பதவி ஒரு பென்ஷன் எளிய விளக்கம்

 

1980-இல் ஒரு ராணுவ கேப்டன் பணி புரியும் போது சுமார் 8000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார், மேலும் அதே ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெறும் போது சுமார் 4000 ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார், அதே 4000 ரூபாய் ஓய்வூதியம் தான் இன்று வரைக்கும், அதாவது 2015 இல் கூட

அதே போல

2015- இல் ஒரு ராணுவ கேப்டன் பணி புரியும் போது சுமார் 35000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார், மேலும் அதே ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெறும் போது சுமார் 17000 ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார்.

இங்கே இருவருக்கும் ஒரே பதவி தான், ஆனால் ஓய்வூதியம் மட்டும் வித்தியாசம்.. சுமார் 13000 ரூபாய் வித்தியாசம்.

இதை மாற்றி 1980 இல் ஓய்வு பெற்ற கேப்டனுக்கும் 2015 இல் ஓய்வு பெற்ற கேப்டனுக்கும் பதவியின் அடிப்படையில் ஒரே அளவு ஓய்வூதியம் வழங்குமாறு தான் 2001 முதலே முன்னாள் ராணுவ வீரர்கள் கேட்டுகொண்டே இருக்கிறார்கள்,,,!!