அடுத்த தலைமுறை நீர்மூழ்கி கப்பல் கட்டும் திட்டம், அரசு விரைவில் முடிவு

இந்திய கப்பல் படைக்கு P 75 I என்னும் திட்டத்தின் கீழ் சுமார் ஆறு நீர் மூழ்கி கப்பல்களை சுமார் 60,000 கோடி செலவில் இந்தியாவில் உள்ள கப்பல் கட்டும் தளங்களில் வெளிநாட்டினர் உதவியுடன் கட்ட திட்டமிட்டுள்ளது, இந்த நீர் மூழ்கிகள் மற்ற கப்பல்களை விட எடை அதிகமாகவும் ஏவுகணைகளை வீசும் திறன் கொண்டதுமாக இருக்கும்.

இது போன்ற நீர்மூழ்கி கப்பல்களை உலகில் நான்கு நாடுகளே தயாரிக்கின்றன, இவை ஏற்கனவே ஆஸ்திரேலிய நாட்டு நீர்மூழ்கி ஒப்பந்தத்தில் கலந்துள்ளன, இதில் பிரான்ஸ் நாட்டின் SMX Ocean, ஜெர்மன் நாட்டின் Type 216, சுவீடன் நாட்டின் A 26, மற்றும் ஜப்பானின் Soryu ஆகியவை அடங்கும்.

இந்த கப்பல்கள் சுமார் 4000 டன்களுக்கு மேல் எடையும், நீர் மூழ்கி கப்பலிலிருந்து தொலை தூர ஏவுகணைகளை வீசவும், நவீன உந்து சக்தியையும் கொண்டிருக்கும், இது போன்ற அதிக சக்தி உள்ள நீர்மூழ்கிகள் விமானம் தாங்கி கப்பலுக்கு பாதுகாப்பாக செல்ல அதிகமாக பயன்படுத்தப்படும்.

தற்போதுவரை இந்த P 75 I திட்டத்தில் பிரான்ஸ் நாட்டின் SMX Ocean மட்டுமே தனது மாதிரியை அளித்துள்ளது, ஜெர்மன் நாட்டிடம் இது குறித்து அரசும் கப்பல் படையும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, மேலும் அவர்கள் தங்கள் கப்பல் மாதிரியை இந்தியாவிற்கு கொடுக்க வாய்ப்புகளும் அதிகம்.

இந்தியா ஜப்பானுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, ஜப்பானின் சரயு ரக நீர்மூழ்கி தான் மற்ற எல்லாவற்றையும் விட அதி நவீன நீர் மூழ்கி ஆகும், ஆனால் இந்தியாவிற்கு இதை விற்பனை  செய்ய ஜப்பான் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா இரண்டு விமானம் தாங்கி கப்பலையும், நான்கு ஹெலிகாப்ட்டர் தாங்கி கப்பல்களையும் படையில் சேர்க்கவுள்ளது, இந்த படைக்கு காவலாக சுமார் 12 நீர் மூழ்கிகள் தேவைப்படுகின்றது,

இந்தியா ஏற்கனவே P 75 திட்டத்தின் கீழ் சுமார் ஆறு நீர் மூழ்கிகளை கட்டி வருகிறது, இதற்கு கல்வாரி என்று பெயர்  சூட்டப்பட்டுள்ளது, இதில் இரண்டு கட்டி முடிக்கப்பட்டு ஒன்று சோதனையில் உள்ளது, இந்த வருட இறுதி முதல் அடுத்த ஒவ்வொரு ஆண்டும் ஒரு கப்பல் படையில் சேர்க்கப் படும்.