பாகிஸ்தானை தாக்க இந்தியா திட்டமிட்டது, பின்லேடன் டைரி குறிப்புகள்

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் தங்கியிருந்த பின் லேடனை அமெரிக்க சிறப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர், அதோடு அங்கிருத்து ஏராளமான தகவல்களையும் சேகரித்தனர், அவற்றின் தகவல்களை தற்போது அமெரிக்கா வெளியிட்டு வருகிறது, அதில் பாகிஸ்தானை இந்தியா தாக்க திட்டம் தீட்டி வருவதாகவும் எழுதியிருந்தது.

பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனுக்கு பாகிஸ்தான் அதிக உதவிகள் செய்தது, பாகிஸ்தானுக்கு உதவியாக பின்லேடனும் இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவதத்தை வளர்க்கும் திட்டங்களை அவ்வப்போது இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிராதிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தான், மேலும் இந்திய படைகள் பாகிஸ்தானை தாக்க தயாராக இருப்பதாகவும் பாகிஸ்தானுக்கு தெரிவித்தான்.

இந்திய ராணுவமும் விமானப்படையும் இங்கிலாந்து நாட்டுடன் தொடர்ச்சியாக பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், ஐரோப்பாவின் மேலும் சில நாடுகளுடன் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாகவும் அந்த குறிப்பில் எழுதி வைத்துள்ளான்.

மேலும் கடந்த 2008-இல் இஸ்ரேல் நாட்டின் உளவு செயற்கைக்கோளை இந்தியா இஸ்ரோ-வின் ராக்கெட்டில் வைத்து அனுப்பியது, இதை கூறுகையில், இந்த உளவு செயற்கைக் கோள் மூலம் இஸ்ரேலும் இந்தியாவும் பாகிஸ்தானின் எந்த ஒரு பகுதியையும் கண்காணிக்க முடியும் என்றும் இஸ்ரேலும் இந்தியாவும் நெருங்கி பழகி வருவது, பாகிஸ்தானுக்கு பின்னடைவே என்றும் எழுதியுள்ளான்.

இந்தியாவின் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தைக் குறிப்பிடும் போது, மேற்கத்திய நாடுகளின் இந்த புதிய விமானங்கள் இந்தியாவிற்கு அதிக பலத்தைக் கொடுக்கும் என்றும் பாகிஸ்தானுக்கு எதிராகவே இந்தியா இதை பயன்படுத்தும் என்றும் எழுதியுள்ளான்.