3 CRPF வீரர்கள் பலி, உதவாத விமானப் படை

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் மாவோயிஸ்டுகளுக்கும் மத்திய போலீஸ் படைகளுக்குமிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் மூன்று CRPF வீரர்கள் மரணமடைந்தனர்,  மேலும் சுமார் 14 போலீசார் படுகாயமுற்றனர், விமானப்படையின் ஹெலிகாப்டர் உதவாததே உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

சுக்மாவில் மாவோயிஸ்டுகளை எதிர்த்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர், கடந்த வியாழன் அன்று நடந்த சண்டையில் முதலில் ஒரு CRPF அதிகாரியின் நெஞ்சில் குண்டு பாய்ந்தது, உடனடியாக CRPF பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட விமானப்படை ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது, ஆனால் தரையிறங்குமிடத்தில் கடும் துப்பாக்கி சண்டை நடை பெற்று வந்ததால் அங்கு தரை இறங்க விமானப்படை மறுத்து விட்டது,

மேலும் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்று விட்டது, காயமடைந்த அதிகாரியை சுமார் 15 கிலோமீட்டர் சுமந்து சென்று மருத்துவ உதவிக்காக ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்தனர்.

பின்னர் இன்னும் சில மணி நேரங்களிலேயே, சுமார் 10 க்கும் அதிகமான CRPF வீரர்களுக்கு குண்டடி பட்டது, மருத்துவ உதவிக்காக மீண்டும் Mi 17 ஹெலிகாப்டரை அழைத்தனர். விமானப்படை விமானிகள்  ஹெலிகாப்டரை சண்டை நடந்த பகுதிக்கு அருகிலேயே தரை இறக்க முற்பட்டனர், இருப்பினும் கடுமையான துப்பாக்கி சூடு காரணமாக அவர்களால் தரையிறக்க  இயலவில்லை.

மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கு முன்பு தெரிவிக்கையில், CRPF பணிகளுக்காக இரண்டு Mi 17 ஹெலிகாப்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவத் தேவைகளுக்காக அது எந்நேரமும் தயார் நிலையில் வைக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் அதிலுள்ள துப்பாக்கிளையும் ராக்கெட்டுகளையும் பயன்படுத்த விமானப்படைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ தேவைகளுக்காக வரும் ஹெலிகாப்டர்களை தாக்கினால் அவை பயன்படுத்தப்படும் என்றும் கூறியது.

ஆனால் வியாழன் அன்று நடை பெற்ற சம்பவத்தின் போது, CRPF வீரர்களுக்கு விமானப்படை உதவி செய்யவில்லை என்றும், மாவோயிஸ்டுகள் மீது ஹெலிகாப்டரிலிருந்து சுட அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உரிய அரசு அனுமதிகள் இன்றி விமானப்படை தன் ஆயுதங்களை பயன்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

விமானப்படை ஹெலிகாப்டர் துப்பாக்கி சூடு நடந்த இடத்திற்கு அருகே தரை இறங்காததும், ஹெலிகாப்டரில் உள்ள துப்பாக்கிகளை பயன்படுத்தாததுமே காரணம் என்றும் தகவல்கள் கூறுகின்றன, இதற்கு அரசு அனுமதி அளிக்காததே முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.