சிறிய ஆளில்லா ட்ரோன் மூலம் இந்தியாவை தாக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டம்

 

ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எல்லை தாண்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் தற்போது ஆளில்லா உளவு விமானங்களை பயன்படுத்துவதாகவும், பின்பு அதை பயன்படுத்தி சிறிய அளவில் தாக்கவும் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிப்பதாக கூறியது,

சமீபத்தில் காஷ்மீரில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை விசாரித்த போதும் அவர்கள் இதே போன்று தகவல்களை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் சிறிய பாராகிளைட் விமானம் மூலம் இந்திய எல்லைக்குள் ஊடுருவ திட்டம் வகுத்துள்ளதும் தெரிய வந்தது,

26/11 மும்பையில் தாக்குதல் நடத்திய அனைத்து தீவிரவாதிகளும் விமானத்திலிருந்து குதிக்கும் பயிற்சிகளை மேற்கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது,

தீவிரவாதிகள் சிறிய பாராகிளைட் விமானம் செய்ய தேவையான உபகரணங்களை சீனா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து வாங்குவதாகவும், ஆளில்லா உளவு விமானங்களை பாகிஸ்தானிலேயே உற்பத்தி செய்வதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது,

இந்த வருட தொடக்கத்தில் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்ப சேர்ந்த தீவிரவாதியிடம் நடத்திய விசாரணையில் அவன் ஏற்கனவே பாராகிளைட் விமானம் ஓட்ட இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனத்தில் பயிற்சி பெற்றதாகவும், பிறகு அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனத்திடமிருந்து இரண்டு சிறிய பாராகிளைட் விமானம் வாங்கியதாகவும் ஏற்கனவே தகவல் அளித்திருந்ததும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது,

இந்த வகை பாராகிளைட் விமானம் மூலம் இந்தியாவில் எல்லைக்குள் ஊடுருவி ராணுவ மையத்திற்கு மேல் பறந்து குண்டுகளை வீச முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்,

உளவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒரு பாரா கிளைடர் விமானம் பாகிஸ்தான் நாட்டுக்காரனால் சுமார் $10,000-க்கு வாங்கப்பட்டுள்ளதாகவும், அதில் இருவர் பயணிக்க முடியும் என்றும், மேலும் 150 கிலோ வரை பொருட்களை எடுத்து செல்லவும் முடியும் என்றும், அதனால் 70 கிலோ மீட்டர் தூரம் பறக்கவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.