பாதுகாப்புத் துறை பட்ஜெட் 2016-2017
இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர், இந்திய பாதுகாப்புப் படைக்கு சுமார் $50.4 பில்லியன் அல்லது 340921.98 கோடி ரூபாயை ஒதுக்கினர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 20% அளவு உயர்வு ஆகும், இருப்பினும் இதில் சுமார் 21% அளவு பணம் புதிதாக அறிவிக்கப்பட்ட ஒரே ரேங்க் ஒரே பென்ஷன் திட்டத்திற்கு செலவிடப்படவுள்ளது.
OROP – பென்ஷன் | 82,000 cr | $12 b |
புதிய ஆயுதங்கள் | 78,587 cr | $11.4 b |
சம்பளம் | 1,43,869 cr | $21.1 b |
செலவு | 37,400 cr | $5.5 b |
மொத்தம் | 3,40,922 cr | $50 b |
கடந்த ஆண்டு சுமார் $40.4 பில்லியன் பணத்தை இந்திய பாதுகாப்பு படைக்கு ஒதுக்கியது அரசு, ஆனால் இதிலும் சுமார் $1.2 பில்லியன் அளவு பணத்தை செலவளிக்காமல் திரும்ப நிதி அமைச்சகத்திற்கே பாதுகாப்பு அமைச்சகம் திருப்பிக் கொடுத்தது, இது கடும் விமர்சனத்திற்குள்ளாகியது,
இந்த பணத்தில் ராணுவ வீரர்களுக்கு தேவையான குண்டு துளைக்காத கவசம் அல்லது வாகனங்களை வாங்கியிருக்கலாம், அல்லது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காவது ஒதுக்கியிருக்கலாம் என்று ராணுவ பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் இந்த முறை புதிய ஆயுதங்கள் வாங்க சுமார் $10.1 பில்லியன் அளவு பணம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, பாதுகாப்பு துறையின் பல உபகரணங்களை நவீனப்படுத்த இது மிகக் குறைவான பணம் என்றே கருதப்படுகிறது, உதாரணமாக புதிய விமானங்கள், ஏவுகணைகள், போர்க் கப்பல்கள், போன்றவை வாங்க சுமார் $30 பில்லியன் வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது,
எனவே இந்த ஆண்டில், கப்பல் படைக்கு புதிய நீர்மூழ்கி, போர் கப்பல், விமானம் தாங்கி கப்பல் கட்டும் திட்டம், அந்தமான் தீவை பலப்படுத்தும் திட்டம், விமானப் படைக்கு புதிய எரிபொருள் நிரப்பும் விமானம், பறக்கும் விமான கட்டுப்பாட்டு அமைப்பு, ரபேல் போர் விமான ஒப்பந்தம், FGFA போர் விமான ஒப்பந்தம், ராணுவத்தின் துப்பாக்கி, புதிய ஆர்ட்டில்லரி வாங்கும் திட்டம், அடுத்த தலைமுறை டாங்கிகள் தயாரிக்கும் திட்டம், இவை அனைத்துமே கிடப்பில் போடப்படும் சாத்தியக் கூறுகள் அதிகம்.
$50 பில்லியன் பட்ஜெட்டில் சுமார் $12 பில்லியன் ஓய்வூதிய திட்டத்திற்கும், மேலும் சுமார் $20 பில்லியன் அளவு பணம் படை வீரர்களுக்கு சம்பளம் மற்றும் இதர செலவுகளுக்குமே போய் விடும், எனவே மொத்த பட்ஜெட்டில் ராணுவ செலவிற்கு சுமார் $18 பில்லியன் அளவு பணமே கிடைக்கும்.
மேலும் இன்றைய பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட் குறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து எதுவும் கூறாதது வியப்பளித்துள்ளது,