புதிய Su 30 MKI விமானங்களை வாங்க விமானப் படை மறுப்பு

இந்திய விமானப் படையின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மேலும் 40 சுக்ஹோய் Su 30 விமானங்களை வாங்குமாறு இந்திய விமானப் படையை ரஷ்யா நிர்பந்தித்தது, ஆனால் இந்திய விமானப் படையோ அதிகமான விமானங்கள் தேவை இல்லை என்றும் இருக்கும் விமானங்களின் நம்பகத் தன்மையை அதிகரிக்கப் போவதாகவும் கூறியது.

இந்திய விமானப் படையின் முதுகெலும்பாக ரஷ்ய தயாரிப்பில் உருவான Su 30 MKI போர் விமானம் உள்ளது, இதை இந்தியாவிலேயே ரஷ்யாவின் அனுமதியைப் பெற்று HAL  நிறுவனம் தயாரித்து வருகிறது, ஆனால் இந்த விமானங்களின் நம்பகத்தன்மையும், தேவைப்பாடும் சரியாக இல்லாததால் அதை சரி படுத்தவே இந்தியா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆட்சியில் இந்த விமானங்களை சரியாக பராமரிக்காததும், புதிய ஒப்பந்தங்கள் போடப்படாமலும் இருந்ததால் இந்த விமானங்களின் பறக்கும் தன்மை சுமார் 55% ஆக குறைந்து விட்டது, இதற்கு HAL மற்றும் ரஷ்யாவே முழு பொறுப்பு ஆகும்.

முக்கிய உதிரி பாகங்களான ராடரில் உள்ள சிறிய எலெக்ட்ரிக் பொருட்கள் மற்றும் என்ஜினில் உள்ள பிளேடுகள் தற்போது ரஷ்யாவிலிருந்தே  வாங்கப்பட்டு வருகிறது. அதை இந்தியாவில் தயாரிக்கும் போது, இதன் நம்பகத் தன்மை மற்றும் பறக்கும் திறன் அதிகரிக்கும் என்று விமானப் படை நம்புகிறது.

இந்தியாவின் ரபேல் விமான கொள்முதல் இதுவரை இறுதியாகாததால், ரஷ்யா தொடர்ந்து தனது போர் விமானத்தை வாங்குமாறு இந்தியாவை வற்புறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது