ராணுவ இலகு ரக வாகன கொள்முதல் ஒப்பந்தம்

இந்திய ராணுவம் புதிய ரக நவீன இலகு ரக வாகனங்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டு அதற்கான ஒப்பந்த புள்ளியை கடந்த 2010-இல் வெளியிட்டது, முதலில் இதில் வெளிநாட்டு வாகனங்களே போட்டியிட்டன, ஆனால் இந்தியாவின் தனியார் நிறுவனங்களும் இதில் ஆர்வம் காட்டியதை அடுத்து புதிய ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு அதற்கான சோதனைகள் நடைபெற்று வெற்றி பெற்ற வாகனத்தை அறிவிக்க ராணுவம் தயாராகி வருகிறது.

இந்த புதிய இலகு ரக ஜீப்புகள் ஏற்கனவே ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ள மஹிந்த்ரா ஜீப்புகளுடன் இணைந்து செயல்படும், இந்த புதிய ஜீப்புகள் எல்லைப் பகுதியிலேயே அதிகம் பயன்படுத்தப்படும், புதிய ஜீப்புகளில் கடினமான பாதுகாப்பு அம்சங்களும், பாதுகாப்பு மற்றும் எதிர்த்து தாக்கும் வசதிகளும் இருப்பதே அதற்கு காரணம் ஆகும்.

2012-ல் வெளிவந்த ஒப்பந்த புள்ளி அடிப்படையில் இந்த திட்டம், இந்திய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தது, இதில் மஹிந்த்ராவின் ஏக்ஸ், டாட்டாவின் LST ஆகிய இரண்டும் கடும் போட்டியிட்டன. இரண்டும் ராணுவத்தில் பல்வேறு கட்ட சோதனைகளில் தேர்ச்சி பெற்றன. இருப்பினும் வெற்றி பெற்றது யார் என்பதை ராணுவம் அறிவிக்கவில்லை.

பின்னும் சில வருடங்களில் இந்தியாவின் அசோக் லேய்லன்ட்-ம் தனது சார்பில் ஒரு இலகு ரக வாகனத்தை இந்த ஒப்பந்தில் சேர்த்துக் கொள்ளுமாறு ராணுவத்தை கேட்டுக் கொண்டது, ராணுவமும் சம்மதித்து ஏற்றுக் கொண்டது, காரணம் லேய்லன்ட் ஈடுபடுத்திய இந்த ஜீப், மற்றவைகளை விட சிறந்தது ஆகும். இது வெளி நாட்டு உதவியுடன் வடிவமைக்கப்பட்டது, அதன் திறனும் அதிகம்.

இதனால் இந்த ஒப்பந்தம் மேலும் சிக்கலுக்குள்ளாகியது, எனவே ராணுவம் முடிவை அறிவிக்காமல், இதுவரை காலம் தள்ளி வருகிறது, அல்லது ரகசியமாக வைத்துள்ளது, இந்த இலகு ரக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய ராணுவம் சுமார் 3500 ஜீப்புகளை 4000 கோடி ருபாய் செலவில் வாங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் அரசு இதற்காக இன்னும் பணத்தை ஒதுக்காமல் இருப்பதால், ராணுவமும் அதன் முடிவை இன்னும் அறிவிக்கவில்லை, 2010-லேயே வெளியிடப்பட்ட ஒப்பந்தம் இன்னும் நிறைவுபெறாததும் குறிப்பிடத்தக்கது