ஆளில்லா தாக்கும் விமானங்களை செய்ய L&T -க்கு ஒப்புதல்


இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனம் பட லக்ஷ்ய என்னும் ஆளில்லாத தாக்கும் விமானங்களை தயாரித்து இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு அளித்து வருகிறது.

இந்த விமானம் ஒலியை விட குறைவாக ஆனால் சுமார் 800 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து எதிரின் இலக்கை தாக்கி அழிக்கும். இதை நிலம் அல்லது கப்பலிலிருந்து செலுத்தலாம். குறைந்த உயரத்தில் பயணிப்பதால் எதிரி எவுகணைகளால் இடை மறித்து தாக்குவது மிகக் கடினம்.

இதை தற்போது குறைந்த அளவிலேயே திரடோ தயாரித்துக் கொண்டு வருகிறது.

ஆகவே இதை அதிக அளவில் தயாரிக்க தனியார் நிறுவனமான L&T , பொதுத்துறை நிறுவனமான DRDO- வை அணுகியது, மேலும் L&T தயாரிக்கும் ஒவ்வொரு விமானத்திற்கு DRDO விற்கு கமிஷன் தரவும் ஒப்புக் கொண்டுள்ளது, எனவே இதை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒப்புதல் கேட்டது. இந்திய பாதுகாப்பு அமைச்சகமும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த வகையான ஆளில்லா விமானங்களுக்கு உள்நாட்டு ராணுவத்தில் அதிக தேவை இருப்பதாலும், இஸ்ரேல், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இதை வாங்குவதில் ஆர்வம் காட்டியதாலும், இதை ஏற்று நடத்த L&T முன்வந்துள்ளது.