பிப்பாவாவ் ரோந்து கப்பல் இன்னும் சில மாதங்களில் கப்பல் படைக்கு வழங்கப்படும்

இந்திய கப்பல் படைக்கு நவீன ரக ரோந்து கப்பல்களை கட்ட பிப்பாவாவ்விற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு சுமார் 2600 கோடி ரூபாய் செலவில் ஐந்து கப்பல்கள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படயில் முதல் இரு கப்பல்களை கட்டி முடித்து வெள்ளோட்டம் விட தயாராகி வருகிறது பிப்பாவாவ்.

மேலும் மூன்று கப்பல்கள் தற்போது கட்டப்பட்டு வருவதாகவும், அவையும் இன்னும் ஓரிரு வருடத்திற்குள் இந்திய கப்பல் படைக்கு வழங்கப் பட்டு விடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கப்பல் படையின் ரோந்து கப்பல்களான இவை, கடலில் தொடர்ந்து ரோந்து செல்லவும், கடலின் தன்மையை கண்காணிக்கவும், கடலிலிருந்து செல்லும் தொலை தொடர்புகளுக்கு உதவியாகவும், வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பாகவும், மற்றும் கப்பல் படை கப்பல்களுக்கு உதவியாகவும் இருக்கும்.

இந்த கப்பலின் முக்கிய ஆயுதமாக ஒரு 76mm அளவு கொண்ட துப்பாக்கியும், மற்றும் 30 mm அளவு கொண்ட AK 630 துப்பாக்கியும் உள்ளது, அதோடு மின்னணு போர் கருவிகள், எதிரி கப்பல்களின் தகவல்களை இடை மறிக்கும் அமைப்புகள், மேலும் நவீன தகவல் தொடர்பு கருவிகளும் இதில் உள்ளது.

சுமார் 2000 டன் எடையுள்ள இந்த கப்பலால் சுமார் 25 நாட்ஸ் வேகம் வரை பயணிக்க முடியும், மேலும் சுமார் 6000 கடல் மைல் தொலைவு வரை சென்று ரோந்து மேற்கொள்ள முடியும்.