விலையை குறைக்காமல் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தாகாது, பாதுகாப்பு அமைச்சர்

ரபேல் போர் விமானத்தின் விலையைக் குறைக்காமல் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என்று பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விமான விலையை குறைப்பது பற்றி இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பிரான்ஸ் அதிக அளவில் விலையை நிர்ணயித்துள்ளதாகவும், இந்திய அதை விட மிகக் குறைவாக கேட்பதாகவும், பிரான்ஸ் 36 விமானங்களுக்கு சுமார் 91,000 கோடி ரூபாய் கேட்பதாகவும், இந்தியா 68,000 கோடிக்கு கீழ் கேட்பதாகவும், பாதுகாப்பு அமைச்சர் தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியின் போது தெரிவித்தார்.

இந்தியா ஏற்கனவே பிரான்ஸ் நாட்டின் டியசால்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த நிறுவனம் தான் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கிறது. கடந்த ஜனவரி மாத இறுதியில் அரசு அறிவிக்கும் போது இன்னும் நான்கு வாரங்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறியது குறிப்பிடத் தக்கது.

இதனிடையே, பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பு ஒப்பந்தில் உள்ள பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதைக் காட்டுகிறது