இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை வழங்குகிறது அமெரிக்கா

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு F 16 போர் விமானங்களை வழங்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இந்த விமானங்கள் பாகிஸ்தான் நடத்திவரும் தீவிரவாதிகளுக்கெதிரான போரில் பாகிஸ்தான் பயன்படுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது, இந்த விமான ஒப்பந்தத்தை ஒரு முறை அமெரிக்கா காங்கிரஸ் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவும் இந்தியாவும் தற்போது மிகவும் நெருங்கி பழகி வருகின்றது, இதற்கு முக்கிய காரணம் ரஷ்யாவும் சீனாவும்  மிகவும் நெருங்கி பழகி வருவதே ஆகும், சீனாவுடன் போர் ஏற்படும் நேரத்தில் அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடுமே உதவ வராது எனபதும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறோம் என்ற பெயரில் தொடர்ந்து ஆயுதங்களை அமெரிக்காவிடமிருந்து மிகக் குறைந்த விலையில் வாங்கி வருகிறது, இதை  இந்தியா உட்பட  பல நாடுகளும் அமெரிக்க அரசு அதிகாரிகளும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளை தாக்குகிறோம் என்ற பெயரில் ஆயுதங்களை வாங்கி குவித்து அதை இந்தியாவிற்கு எதிராகவே பயன்படுத்தும் என்றும், பாகிஸ்தானே உலக தீவிரவாதத்தின் பிறப்பிடம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர், அதனாலேயே அமெரிக்க காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு விமானம் வழங்குவதை கடுமையாக எதிர்த்து அதை தடுத்தது, ஆனாலும் ஒபாமாவின் வெள்ளை மாளிகை எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை கொடுக்க முன்வந்துள்ளது.

சுமார் $700 மில்லியன் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் எட்டு அதிநவீன F 16 போர் விமானங்களை பாகிஸ்தான் பெற்றுக் கொள்ளும், அதோடு விமானத்தில் உதிரி பாகங்களும் அடங்கும்.

அமெரிக்காவின் இந்த முடிவிற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, மேலும் இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டையும் அழைத்து சம்மன் கொடுத்தது, வெளியுறவு துறை அமைச்சகம் கூறுகையில், அமெரிக்காவின் இந்த செயல் கடும் அதிருப்தியை தருவதாகவும், இந்திய அமெரிக்க உறவில் இது விரிசலையும் சிக்கலையும் ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது.

மேலும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறுகையில், இதை அமெரிக்க செனட் கடுமையாக எதிர்ப்பதாகவும், இந்த விமான விறபனையை தடுக்க எல்லா வழிகளையும் முயற்சி செய்யப் போவதாகவும் தெரிவித்தனர்.

இந்திய பாதுகாப்பு மந்திரி கூறும் போது, இன்னும் சில வழி முறைகள் இருப்பதால், அமெரிக்காவின் இந்த முடிவு மாறும் என்று அவர் தெரிவித்தார், மேலும் இந்தியா தொடர்ந்து இது பற்றி அமெரிக்காவுடன் ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.