சிங்கப்பூரின் ஆகூர் நிறுவனத்துடன் கை கோர்க்கிறது ரிலையன்ஸ்

 

ரிலையன்ஸ் குழுமத்தின் ஆளில்லா பாதுகாப்பு சாதனங்கள் செய்யும் பிரிவுடன் சிங்கப்பூரின் ஆகூர் நிறுவனம், காற்று மிதவைகள் (Aero Stats ) மற்றும் ஆகாயக் கப்பல்களை (Air Ships ) செய்ய முன்வந்துள்ளது.

சமீபத்தில் கப்பல் கட்டும் தனியார் நிறுவனமான piapvav- ய் ரிலையன்ஸ் குழுமம் வாங்கியது, அதனுடனும் ஆகூர் நிறுவனம் ஏற்கனவே கூட்டு சேர்ந்து வேலைகள் செய்து வருகிறது.

இந்த ஒப்பந்தத்தின் படி இரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து இந்தியாவில் ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கும், அரசு விதிமுறைகளின் படி ரிலையன்ஸ் குழுமத்தின் பங்களிப்பு 51% மாக இருக்கும்.

இந்த புதிய கம்பனி ராணுவம் மற்றும் பொதுத் தேவைக்கான காற்று மிதவைகள் மற்றும் ஆகாயக் கப்பல்களை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யும்.

ஏற்கனவே இரு நிறுவனங்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி ஒரு நடுத்தர வகையான காற்று மிதவையை செய்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடினமான சோதனைகளிலும் இது வெற்றி பெற்று விட்டாதாக அதிகாரிகள் கூறினார்கள்.

இந்தியாவின் மிக நீளமான எல்லையை கண்காணிக்க குறைந்த செலவில் உருவாக்கப்படும் காற்று மிதவைகள் மிக பயனுள்ளதாக இருக்கும், இந்த காற்று மிதவைகளுக்கான தேவை 2020-ல் சுமார் $10 பில்லியன்