ஆர்டர் செய்யப்பட்ட அனைத்து Mi 17 ஹெலிகாப்டர்களையும் டெலிவரி செய்தது ரஷ்யா

இந்திய விமானப்படை சுமார் 151 நடுத்தர ரக ஹெலிகாப்டர்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க ஒப்பந்தம் போட்டிருந்தது. இதை மூன்று தவணைகளாக வாங்கியது. தற்போது ஆர்டர் செய்யப்பட்ட அனைத்து ஹெலிகாப்டர்களையும் ரஷ்யா டெலிவரி செய்துள்ளதால், கூடுதலாக இன்னும் சுமார் 48 ஹெலிகாப்டர்களை வாங்க முடிவெடுத்துள்ளது.

2008-இல் தொடங்கி 2013 வரை மொத்தம் மூன்று ஒப்பத்தங்கள் மூலம் சுமார் 151 Mi 17 நடுத்தர ஹெலிகாப்டர்களை இந்திய விமானப்படை வாங்கியுள்ளது. இதன் மதிப்பு சுமார் மூன்று பில்லியன் டாலர்கள் ஆகும். மேலும் 48 ஹெலிகாப்டர்களை வாங்க சுமார் $1 பில்லியன் அல்லது சுமார் 6700 கோடி ரூபாய் தேவைப்படும்.

Mi 17 ஹெலிகாப்டர் தான் விமானப்படையின் முக்கிய ஹெலிகாப்டர் ஆகும். இது பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப் படுகிறது. எல்லையில் உள்ள வீரர்களுக்கு உணவு முதல் ஆயுதங்கள் வரையும், துருப்புகளை சுமந்து செல்வது முதல் காயம்பட்ட வீரர்களை ஏற்றி செல்லவும். தரைப் படை வீரர்களுக்கு உதவியாக வானிலிருந்து எதிரிகளை தாக்கவும். நக்சல் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் முக்கிய தலைவர்களான பிரதமர் குடியரசுத் தலைவர் போன்றவர்களும் பயணம் செய்ய இந்த ஹெலிகாப்டர்களையே பயன்படுத்தி வருகின்றனர். இயற்கை பேரிடர்களின் போது இந்த ஹெலிகாப்டர்களின் உதவி அளப்பரியது.

சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இதே வகை Mi-17 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஹெலிகாப்டர் சுமார் 4 டன் அளவு எடை சுமக்க வல்லது, அல்லது 30 வீரர்களை சுமந்து செல்லும் ஆற்றல் பெற்றது. இதனால் சுமார் ஆறு  கிலோமீட்டர் உயரம் வரை பறக்க முடியும்