திருத்தி வடிவமைக்கப்பட்ட 106 தேஜஸ் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்படும்

பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விமானப்படையில் உள்ள பழைய ரஷ்ய தயாரிப்பான MiG 27 மற்றும் MiG 21 விமானங்களை நீக்கி விட்டு, புதியதாக திருத்தி வடிவமைக்கப்பட்ட தேஜாஸ் இலகு ரக போர் விமானங்கள் சேர்க்கப்படும், சுமார் 106 தேஜாஸ் விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவிகின்றது.

திருத்தி வடிவமைக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் சுமார் 43 விதமான மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வரும் தேஜஸ் விமானத்தை விட இந்த மார்க் 1 A விமானம் செயல் திறன் அதிகம் கொண்டதாகவும் இருக்கும்.

இந்த விமானத் தயாரிப்பு, விமானத்தை வடிவமைத்த ADA மற்றும் தயாரிப்பாளர் HAL ஆகிய அரசு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும், மேலும் விமானங்களை தக்க சமயங்களில் டெலிவரி செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறை கொடுத்துள்ள காலப்படி , முதல் விமானத்தை 2018-க்குள் தயாரிக்கவும், மொத்த விமானங்களையும் அடுத்த ஐந்து ஆண்டுக்குள் அதாவது 2023-க்குள் தயாரித்து விமானப்படைக்கு கொடுக்க வேண்டும் எனவும் HAL நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய விமானத்தில் இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட ராடர்கள், எதிரி ராடர்களை செயலிழக்க செய்யும் கருவிகள், மற்றும் வானிலேயே எரிபொருள் நிரப்பும் அமைப்புகளும் சேர்க்கப்படவுள்ளது, மேலும் பழைய தேஜாஸ் மாதிரிகளை விட இது சுமார் ஒரு டன் அளவு எடை குறைவானது ஆகும்.

விமானப்படையில் சுமார் 260 பழைய சோவியத் நாட்டில் தயாரிக்கப் பட்ட MiG ரக போர் விமானங்கள் உள்ளன, மேலும் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் விமானப்படைக்கு சுமார் 400 புதிய போர் விமானங்கள் தேவைப்படுகிறது.