கப்பல் படையின் புதிய போர் கப்பல்களை கட்ட எஃகு வழங்குகிறது செயில்

மத்திய அரசின் உருக்கு நிறுவனமான செயில், கப்பல் படைக்கு புதிய போர்கப்பல்களைக் கட்ட  எஃகு இரும்பை வழங்குகிறது, முதன் முறையாக கப்பல் கட்ட இந்திய  எஃகை செயில் நிறுவனம் கப்பல் படைக்கு கொடுக்கவுள்ளது, இதற்கு முன்பு ரஷ்யாவிலிருந்தே எஃகு வாங்கப்பட்டு கப்பல்கள் கட்டப்பட்டன.

செயில் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கும் போது மொத்தம் 24,000 டன்  எஃகு இந்திய கப்பல் கட்டும் நிறுவனங்களான கொல்கத்தாவிலுள்ள GRSE கப்பல் கட்டும் தளத்திற்கும், மும்பையை சேர்ந்த MDL கப்பல் கட்டும் தளத்திற்கும் வழங்கப்படும்,  ப்ராஜெக்ட் P 17 A என்னும் திட்டத்தில் இந்தியாவிலேயே ஐரோப்பிய கப்பல் கட்டும் நிறுவனமான Fincanteiri நிறுவனத்தின் உதவியுடன் ஏழு புதிய நவீன ரக போர்கப்பல்கள் கட்டப் படும்.

கப்பல்களை துரிதமாக கட்டி முடிக்கும் நோக்குடன் ஏழு கப்பல்களும் இரண்டு கப்பல் கட்டும் நிறுவனங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது, GRSE நான்கும் MDL மூன்று கப்பல்களையும் கட்டவுள்ளது.

செயில் தனது உருக்கு நிலையங்களான பிஹாலி, ரூர்கேலா மற்றும் போகாரோ- விலிருந்து சுமார் 24,000 டன் எஃகை மேற்கண்ட கப்பல் கட்டும்  தளங்களுக்கு கொடுக்கவுள்ளது, மேலும் வரும் காலங்களில் இந்தியாவில் கட்டப்படும் அனைத்து போர் கப்பல்களுமே உள்நாட்டில் தயாரிக்கும் எஃகே பயன்படுத்தப்படவுள்ளது.

இந்தியாவின் விமானந்தாங்கி போர்க்கப்பலில் மிக கடினத் தன்மை வாய்ந்த உருக்கு இரும்பான DMR 249 A உருக்கை ஏற்கனவே கொடுத்துள்ளது செயில் நிறுவனம். ஆனாலும் அதன் பிற பகுதிகள் ரஷ்ய உருக்காலே செய்யப்பட்டுள்ளது.