சரஸ் விமான தயாரிப்பு திட்டத்தை கைவிட்டது இந்தியா

இந்தியாவின் ராணுவ மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு இலகு ரக பயணிகள் விமானம் தயாரிக்க மத்திய அரசு  நிறுவனமான NAL- National Aeronautics limited- டம்  1990-இல் கேட்டுக் கொண்டது, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின் விமானம் பறந்தது, இருப்பினும் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதால் அந்த திட்டத்தை கை விட்டுள்ளது மத்திய அரசு.

இந்திய அரசு பணிகள் மற்றும் ராணுவத் தேவைகளுக்காக சுமார் 300-க்கும் அதிகமான இலகு ரக பயணிகள் விமானம் தேவைப்பட்டது, வெளிநாடுகளிடமிருந்து இந்த அளவில் விமானங்களை வாங்குவதை விட உள்நாட்டிலேயே இதை உருவாக்க அரசு திட்டமிட்டது, அதற்காக சுமார் 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்காக முதலில் ரஷ்யாவின் உதவி நாடப்பட்டது, ஆனால் ஆரம்பத்திலேயே ரஷ்யா இந்த திட்டத்திலிருந்து விலகி விட்டது, பிறகு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் இந்த திட்டம் தொடரப்பட்டது, ஆனால் இந்தியாவின் அணுகுண்டு பரிசோதனையின் காரணமாக மேற்கத்திய நாடுகளின் உதவியும் பின்னாட்களில் மறுக்கப்பட்டது.

சரஸ் விமானம் கனடா நாட்டில் தயாரிக்கப் பட்ட எஞ்சின் மூலமே இயங்குகிறது, எனவே இந்த திட்டத்திற்கு அவர்களின் உதவி வெகுவாக கோரப்பட்டது, மேலும் இந்திய அரசு சரஸ் விமானத்தை 2001-க்குள் பரிசோதனை செய்து பார்க்க உத்தரவிட்டது, ஆனாலும் 2004 லேயே விமானம் முதன் முதலாக பறந்தது.

விமானம் சுமார் 14 பயணிகளையும், இரண்டு விமானிகளையும், ஒரு பொறியிலாளரையும், ஆக 17 பேருடன் பறக்குமாறு வடிவமைக்கப் பட்டது, ஆனாலும் விமானத்தின் அதிக எடை காரணமாக அதில் சுமார் 3 பேரே பயணிக்க முடிந்தது. ஆனாலும் அடுத்த மாடல்களில் இந்த குறைகளை களைய தீர்மானித்து, இரண்டாவது மாதிரியை 2009-இல் பறக்க விட்டது.

ஆனால் விமானத்தின் எஞ்சின் மற்றும் அடிப்படை தரவு கணினிகளில் இருந்த பிரச்சனைகளின் காரணமாக இரண்டாவது விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மூன்று பேரும் மரணமடைந்தனர்,

இதனால் அந்த விமான திட்டத்திற்கு மத்திய அரசு மேற்கொண்டு பண உதவி வழங்கவில்லை, மேலும் திட்டத்தை கைவிடுமாறு 2013-லேயே பரிந்துரைத்தது, இறுதியாக 2016-இல் அதிகாரப் பூர்வமாக இந்த திட்டத்தை ரத்து செய்தது உத்தரவிட்டுள்ளது, மத்திய அரசு.