ரபேல் போர் விமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்தியாவும் பிரான்சும் ரபேல் போர் விமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இந்தியா சார்பில் பாதுகாப்பு துறை அமைச்சர் பாரிக்கரும், பிரான்ஸ் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஒய்வெஸ்-யும் கையெழுத்திட்டனர், இந்த ஒப்பந்தம் செயல் வடிவில் தயாரான போதும், சரியான ஒப்பந்த தொகை இன்னும் முடிவிற்கு வரவில்லை, அதனால் இறுதி ஒப்பந்தத்திற்கு இன்னும் சில நாட்கள் பிடிக்கும் என்று தெரிகிறது.

பிரான்ஸ் தரப்பில் அதிபர் ஹோலாண்டே கூறும் போது, இந்த 36 விமான கொள்முதல் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி கொள்வதாகவும், இந்திய விமானப் படைக்கு இந்த விமானங்களை கொடுக்கவும், போரில் உதவிகள் செய்யவும் பிரான்ஸ் தயாராக இருப்பதாகவும், ஒப்பந்த தொகை பற்றிய முடிவுகள் இன்னும் சில வாரங்களில் எடுக்கப்படும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது, இது இந்திய பிரான்ஸ் உறவில் இன்னும் ஒரு புதிய அத்தியாகமாக இருக்கும் என்றும், கடந்த 2015 ஏப்ரல் அன்று இந்திய பிரதமர் பாரிஸ் நகரில் விமானம் வாங்குவது பற்றி அறிவித்தார், ஜனவரி 2016 அன்று அதற்கான ஒப்பந்தமும் தயாராகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய விமானப் படைக்கு அதிகமான ரபேல் போர் விமானங்கள் தேவை இருப்பதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர், இந்த 36 விமானங்கள் சீன எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் இது போன்ற விமானங்களை நிலை நிறுத்த வேண்டியது அவசியம் என்றும் அதற்கு சுமார் 10 ஸ்குவாட் அளவு ரபேல் விமானங்கள் தேவைப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய தகவல்கள் படி இந்திய கப்பல் படையும், ரபேல் போர் விமாங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது, அநேகமாக இதை புதியதாக கட்ட திட்டமிட்டுள்ள INS விஷால் போர் கப்பலில் சேர்க்கவும், அந்தமான் தீவில் நிலை நிறுத்தவும் கப்பல் படை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது, இந்திய கப்பல் படை ஏற்கனவே மிக் 29 K  போர் விமானங்களை பயன்படுத்தி வருகிறது,

சில நம்பகமில்லாத தகவல்கள் படி, இந்தியாவின் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து ரபேல் விமானத்தை இந்தியாவிலேயே தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும், அது நடந்தால் விமானப் படைக்கும் கப்பல் படைக்கும் தேவையான அளவு ரபேல் விமானங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது